2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்டும், மத்திய அரசு திட்டத்தின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2 கோடியே 94 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பதிலளித்த மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளில் 13.12.2023 வரை 2 கோடியே 51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின்படி மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 7,79,851 ஆகும்.
இவற்றில் 2021 – 2022-ல் 2,21,945 வீடுகளும், 2022 – 2023-ல் 37,427 வீடுகளும் பயனாளிகளுக்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.