ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்த யோகி ஆதித்யநாத் !

ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்த யோகி ஆதித்யநாத் !

Share it if you like it

உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) பங்களிப்பு அடிப்படையில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருந்து வந்தன. உத்தர பிரதேசம் 5-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளி உத்தர பிரதேசம் 2-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. முதலீடு மற்றும் பங்குச் சந்தை தொடர்பான போக்குகளை கண்காணித்து வரும் soic.in ஜிடிபி பங்களிப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, 15.7% ஜிடிபி பங்களிப்பைக் கொண்டு மகாராஷ்டிரா முதல் இடத்திலும் 9.2% பங்களிப்பைக் கொண்டு உத்தர பிரதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு (9.1%), குஜராத் (8.2%), மேற்கு வங்கம் (7.5%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 2027-ம் ஆண்டுக்குள் அம்மாநில பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்ற இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தொழில் கொள்கையில் பல்வேறு தளர்வுகளை கொண்டுவந்தபடி உள்ளார். இந்நிலையில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 14-வது இடத்திலிருந்த உத்தர பிரதேசம் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக அம்மாநில அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it