இஸ்லாமிய மாணவியை தேர்தலில்  நிறுத்தும் ஏ.பி.வி.பி !

இஸ்லாமிய மாணவியை தேர்தலில் நிறுத்தும் ஏ.பி.வி.பி !

Share it if you like it

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதல்முறையாக இஸ்லாமிய மாணவியை வேட்பாளராக, ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு நிறுத்தியுள்ளதாக, ஏ.பி.வி.பி தென் தமிழ்நாடு மாநில அமைப்புச் செயலாளர் முத்துராமலிங்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதல்முறையாக இஸ்லாமிய மாணவியை வேட்பாளராக, ஹைதராபாத் மத்திய பல்கலை கழக ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பு நிறுத்தியுள்ளது. தேர்தல் இன்று (நவ. 9) நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) தேர்தலில் தலைவர் பதவிக்கு இஸ்லாமிய மாணவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஷேக் ஆயிஷா என்ற இம்மாணவி விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். வேதியியலில் பிஎச்டி படித்து வருகிறார். இவர், எஸ்எஃப்ஐஏஎஸ்ஏடிஎஸ்எஃப் கூட்டணி சார்பில் போட்டியிடும் மற்றொரு பிஎச்டிமாணவரான முகமது அதீக் அகமதுவை எதிர்த்து போட்டியிடுகிறார். மாணவர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு இரு சிறுபான்மையின மாணவர் இடையே போட்டி நிலவுவது இதுவே முதல் முறையாகும். ஏபிவிபியுடன் பழங்குடியின மாணவர்களின் சேவா லால் வித்யார்த்தி தளமும் (எஸ் எல் வி டி) இணைந்துள்ளது. இந்த அணி சார்பில் 3 மாணவிகள் உட்பட மொத்தம் 9 பேர் தேர்தலை சந்திக்க உள்ளனர்.


Share it if you like it