கமலை கழுவி ஊற்றிய தாடி பாலாஜி மனைவி!

கமலை கழுவி ஊற்றிய தாடி பாலாஜி மனைவி!

Share it if you like it

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை கழுவிக் கழுவி ஊற்றி இருக்கிறார் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.

தமிழ் திரையுலகில் துணை காமெடி நடிகராக வலம் வருபவர் பாலாஜி என்கிற தாடி பாலாஜி. ‘நிலாவே வா, வாலி, பூவெல்லாம் கேட்டுப்பார், சச்சின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். வாலி படத்தில் காமெடி நடிகர் விவேக்குக்கும் இவருக்கும் நடக்கும் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது. மருந்து விற்பனை பிரதியாக இருக்கும் நடிகர் விவேக்கிடம், காலில் ஆணி முதல் மூலம்வரை தனக்கு இருக்கும் அனைத்து வியாதிகளையும் சொல்லி, இவை எல்லாம் ஒரு மாத்திரையில் சரியாக வேண்டும் என்று கேட்கும் சீன், அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காட்சியாகும்.

தாடி பாலாஜியும், நித்யா என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு போஷிகா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால், அவரது மனைவி பிரிந்து சென்றதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார். இப்படி இருவருக்குமான பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், தாடி பாலாஜி பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி ஷோக்களில் தலைகாட்டி வருகிறார். மேலும், தனது மகளை பகடைக்காயாக பயன்படுத்தி நித்யா தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாகவும் குற்றச்சாட்டு கூறி வருகிறார்.

இந்த நிலையில்தான், கடந்த சில தினங்களாக தாடி பாலாஜி மனைவி பற்றிய ஒரு தகவல், சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, அத்தகவல் பற்றி தாடி பாலாஜி மனைவி நித்யாவிடம், ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு, தாடி பாலாஜிதான் இப்படியொரு விவகாரத்தை கிளப்பி விட்டிருப்பதாகக் கூறும் அவர், மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார். அப்போதுதான், கமல் மிகவும் மோசமானவர் என்று நித்யா கூறியிருக்கிறார். அதாவது, ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நித்யா நடித்தது தொடர்பாகவும், அதற்கு அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததாகவும் அந்த செய்தியாளர் கேடக, யார் கமலா? அவரை மாதிரி ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை தான் பார்த்ததில்லை என்றும், அவரைப் பற்றி தன்னிடம் நிறைய கன்டென்ட்கள் இருப்பதாகவும், அதையெல்லாம் அவிழ்த்து விட்டால் அவ்வளவுதான் என்றும் கூறியிருக்கிறார்.

இக்காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம்தான், கமல் மீது மீண்டும் ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பெண்கள் விஷயத்தில் கமல் மிகவும் மோசமானவர் என்கிற குற்றச்சாட்டு ஏற்கெனவே இருந்து வருகிறது. இதனால்தான், அவரது கட்சிக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்கிற ரீதியிலும் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த சூழலில், தாடி பாலாஜி மனைவி நித்யா, கமல் ஒரு வொர்ஸ்ட் கேரக்டர் என்று கூறியிருப்பது பெண்கள் மத்தியில் அவரது இமேஜை மேலும் டேமேஜ் படுத்தி இருக்கிறது.

https://www.facebook.com/watch/?v=290962266528531&extid=WA-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing


Share it if you like it