மாணவி லாவண்யா மரணத்திற்கு பொறுப்பேற்கப் போவது யார்? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்துக்கு மாற மறுத்ததால் பள்ளி நிர்வாகத்தின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் அரியலூர் மாணவி லாவண்யா. இவரது மரணத்துக்கு நீதி கேட்டு, பா.ஜ.க., வி.ஹெ.பி., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் போராடி வரும் நிலையில், மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் வாய் மூடி மவுனம் சாதித்து வருகின்றன. அதேபோல, நாடு முழுவதுமுள்ள மீடியாக்கள் லாவண்யா மதம் மாற மறுத்து உயிரிழந்த மரணச் செய்தியை அம்பலப்படுத்தி வரும் நிலையில், தமிழக மீடியாக்கள் மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கின்றன.
இந்த நிலையில்தான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன், லாவண்யாவின் மரணத்திற்கு பொறுப்பேற்கப் போவது யார்? என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக கமல் வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ…