நடிகர் மாதவன் மகனால் இந்தியாவிற்கே பெருமை!

நடிகர் மாதவன் மகனால் இந்தியாவிற்கே பெருமை!

Share it if you like it

டென்மார்க்கில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ் திரைஉலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவரது, மகன் வேதாந்த் மாதவன் டென்மார்க்கில் நடைபெற்ற 800 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவரின், இந்த வெற்றி இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து, மாதவன் மகனிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் திரை உலகம் மட்டுமில்லாது ஹிந்தி உலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் நாட்டின் மிக உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு, மாதவன் தனது நன்றியினை தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து நடிகர் மாதவன் திரைப்படம் எடுக்க உள்ளார். இதற்கு, ‘ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம், குறித்து நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணை நேரில் அழைத்து பாரதப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து இருந்தார். இப்புகைப்படங்களை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

Image


Share it if you like it