நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் வரலாற்று சாதனை செய்துள்ளனர். அந்த வகையில், தமிழக மாணவர் பிரபஞ்சன் 720-720-க்கு மார்க் பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்
ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைக்கு வந்தது. வழக்கம் போல, தி.மு.க, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏழை மாணவர்களின் நலனுக்கு விரோதமாக நீட் தேர்வு உள்ளது. அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என பச்சை அரசியல் செய்தனர். இதனை, அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இதுவிர, திராவிட நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறிவந்தார். நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு விரோதமாக உள்ளது. தமிழக மாணவர்களுக்கு இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு கட்டுகதைகளை அள்ளி விட்டார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், 2023 -ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அண்மையில் நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில், முதல் 10 இடத்தில் 4 தமிழக மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில், பிரபஞ்சன் எனும் மாணவன் 720-720 பெற்று ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். தமிழக மாணவர்களின் திறமையை குறைத்து மதிப்பிட்ட நடிகர் சூர்யா எங்கே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

