ராக்கெட்ரி படத்தில் ’ஜெய் ஹிந்த்’ புறக்கணிப்பு? நடிகர் சூர்யாவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்.
பிரபல நடிகர் மாதவன் இயக்குநராக புதிய அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் ராக்கெட்ரி. பாரத தேசத்தின் ரகசியங்களை எதிரி நாடான பாகிஸ்தானுக்கு வழங்கிய போலி புகாரில் சிறை சென்று மீண்டவர் தமிழரான விஞ்ஞானி நம்பி நாராயண். இவர், அனுபவித்த துயரங்கள் மற்றும் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் இத்திரைப்படம். இதில், நம்பி நாரயணனாக மாதவனும், அவரது மனைவியாக பிரபல நடிகை சிம்ரனும் நடித்து இருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில், கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதுதவிர, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தான், பா.ஜ.க மூத்த தலைவரும் மாநில மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் வளர்ச்சியின் மாநில தலைவராக இருக்கும் காயத்ரி ரகுராம், ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா? என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மற்ற மொழியில் நடித்த ஹீரோக்கள் ’ஜெய் ஹிந்த்’ என்று சொல்லும் பொழுது சூர்யா மட்டும் ஏன்? கூறவில்லை என நெட்டிசன்கள் அவரை பொரியல் செய்து வருகின்றனர்.