நடிகர் சூர்யாவை பிரபல ‘யூ டியூப்பர் ராஜவேல் நாகராஜன் சரமாரியாக வெளுத்து வாங்கிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுவர். அ.தி.மு.க. ஆட்சியில் விரும்ப தகாத சம்பவங்கள் நிகழ்ந்த போது தனது கடும் கண்டனங்களை உடனுக்கு உடன் பதிவு செய்தவர். இதுதவிர, மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள், திட்டங்கள் குறித்து எந்தவித புரிதலுமின்றி மிக கடுமையாக எதிர்க்க கூடியவர்.
அந்த வகையில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் நீட் தேர்விற்கு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்தவர். ஏழை மாணவர்களால் எப்படி? நீட் தேர்வு எழுத முடியும் என கேட்டவர். ஆனால், அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் ஆண்டுதோறும் சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றனர்.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்றாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதை தனது கொள்கையாக கொண்டவர் நடிகர் சூர்யா. அந்த வகையில், எங்கும் ஊழல், எங்கும் லஞ்சம், கொலை, கொள்ளை என விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. ஆனால், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., என்றால் உடனே குரல் கொடுக்கும் நபராக இருக்கும் சூர்யா. விடியல், ஆட்சியில் நிகழும் அவலங்கள் குறித்து எப்போது பேசுவார் என பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், பேசு தமிழா பேசு ‘யூ டியூப் சேனலின் நெறியாளர் ராஜவேல் நாகராஜன் நடிகர் சூர்யாவை சரமாரியான கேள்வியினை முன்வைத்து வறுத்தெடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.