தமிழக மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா உள்ளிட்ட போலி போராளிகளுக்கு அரசுப் பள்ளி மாணவிகள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.
கல்வியாளர்கள், சர்வதேச கல்வி நிபுணர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் பெற்ற ஆலோசனையின் பேரில், ஏழை, எளிய, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது. ஆனால், நீட் தேர்வு தங்களது கல்விக் கொள்ளைக்கு வேட்டு வைத்து விடும் என்பதை உணர்ந்த மருத்துவ மாஃபியாக்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகும் கனவை நீட் தேர்வு நாசப்படுத்தி விடும் என்று பொய் பிரசாரத்தை மேற்கொண்டனர். இதற்கு நடிகர் சூர்யா உள்ளிட்ட சில நடிகர்களும் ஒத்து ஊதினர்.
மேலும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்களும் எதிர்ப்புத் தெரிவிப்பதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால், தமிழக மாணவர்களின் திறமையை குறைவாக மதிப்பிட்டு, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் சூர்யா உள்ளிட்ட போலி போராளிகளுக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம், நீட் தேர்வுக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்து வந்த நபர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளனர்.