10 மற்றும் 12- வகுப்பில் தேர்வு பெற்ற மாணவர்களை சந்தித்து பரிசு பொருட்களை வழங்கியுள்ளார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர், எதிர்கால திட்டம் என்பது அரசியலில் உச்சம் தொட வேண்டும் என்பதே. அந்த வகையில், அதற்கான பணிகளை தொடர்ந்து அவர் மேற்கொண்டு வருகிறார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அண்மையில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் சந்தித்தார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது தி.மு.க.வை மறைமுகமாக சாடியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.