நீட் தேர்வுக்கு பயந்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டபோது நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், விஜய் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்கள். ஆனால், தற்போது மத மாற்ற டார்ச்சரால் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் யாருமே செல்லவில்லை. இதனால், அனிதா வீட்டுக்கு வழிதெரிந்த உங்களுக்கு லாவண்யா வீட்டுக்கு வழிதெரியாதா என்று குரல் எழுப்புகிறார்கள் சாமானிய மக்கள்.
மருத்துவக் கல்லூரி நடத்திவரும் மாஃபியாக்களுக்கு சாவு மணி அடிப்பது போல அமைந்திருக்கிறது நீட் தேர்வு. இதுதான் அனைத்து கல்வியாளர்களின் ஒருமித்த கருத்தாக இருந்து வருகிறது. அதாவது, பணம் படைத்தவர்களாக இருந்தாலும், பாமர ஏழை மக்களாக இருந்தாலும் நீட் தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இதனால், மருத்துவ மாஃபியாக்களால் கொள்ளையடிக்க முடியவில்லை. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக அப்பாவி மக்களை திசை திருப்பி வருகின்றனர் மருத்துவ மாஃபியாக்கள். இது நிஜம் என்று நம்பிய மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டனக் குரல்களை எழுப்பி வருகிறார்கள்.
தவிர, நீட் தேர்வு குறித்து ஒருவித அச்சத்தையும் மாணவர்கள் மத்தியில் உண்டாக்கி வருகின்றனர் மருத்துவ மஃபியாக்கள். இதனால், பல அப்பாவி மாணவர்கள் உயிர் துறக்கும் துரதிருஷ்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வுக்கு பயந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, நடிகர்கள் விஜய், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அனிதா வீட்டுக்கு படையெடுத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். தற்போது, அதே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, மதம் மாற மறுத்ததால் டார்ச்சர் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. ஆனால், நடிகர்கள் விஜய், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் வாய் திறக்கவும் இல்லை, எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆகவே, அரியலூர் அனிதா வீட்டுக்கு வழி தெரிந்த உங்களுக்கு, லாவண்யா வீட்டுக்கு விழி தெரியவில்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சாமானிய மக்கள்.