விஜய், உங்கள் வீட்டு பெண்களையும் அப்படிதான் அழைப்பீர்களா ?

விஜய், உங்கள் வீட்டு பெண்களையும் அப்படிதான் அழைப்பீர்களா ?

Share it if you like it

‘நேற்று மாலை 6.30க்கு நடிகர் விஜய் அவர்களின் லியோ படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் லியோ படத்தின் படக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிட்ட அரை மணி நேரத்தில் 29 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய் அவர்கள் ஆபாச வார்த்தையை பயன்படுத்தி ஒரு வசனம் சொல்லியிருக்கிறார். இதனால் பலரும் விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களை இழிவாக பேசி அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள், அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப் போகிறீர்கள்? என நடிகர் விஜய்க்கு மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று தன்னுடைய ரசிகர்களை வைத்து டாக்டர் திரு.பி.ஆர். அம்பேத்கர் போன்றவர்களை முன்னிருத்தும் நீங்கள் லியோ படத்தின் ட்ரெய்லரில் பெண்களை தவறான வார்த்தையில் சித்தரிக்கும் வார்த்தையை கூறி பெண்களை இழிவு செய்வது நியாயமா? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கமா?

கடுமையான வார்த்தைகளில் கூறி தான் ஆக வேண்டும். உங்கள் வீட்டிலும் பெண்ணாக உங்களுடைய தாய், மனைவி, மகள் உள்ளார்கள்.அவர்களையும் அந்த வார்த்தைகளில் தான் நீங்கள் அழைப்பீர்களா? படத்திற்கு வசனம் தேவைப்பட்டால் எவ்வளவோ வார்த்தைகள் தமிழ் மொழியில் உள்ளன. விளம்பர நோக்கத்திற்காக அல்லு சில்லு நடிகர்களைப் போல் மட்டமான, கேவலமான செயல் செய்யும் நீங்கள் உங்களை பின் தொடரும் ரசிகர்களை எவ்வாறு வழி நடத்துவீர்கள்.

நீங்கள் ஆயிரம் காரணம் கூறினாலும் நீங்கள் பேசிய வார்த்தையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. உண்மையில் உங்களுக்கு பெண்கள் மீது மரியாதை இருந்தால் உடனடியாக பெண்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் மன்னிப்பு கேட்க வைக்கப்படுவீர்கள்.” இவ்வாறு வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share it if you like it