சங்கியான விஷால்… மோடிக்கு பாராட்டு!

சங்கியான விஷால்… மோடிக்கு பாராட்டு!

Share it if you like it

காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த நடிகர் விஷால், பாரத பிரதமர் மோடிக்கு தலைவணங்குவதாகக் கூறி, பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இன்று முதல் அவர் புதிய சங்கியாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள்தான் அதிகம். பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட், திராவிட சிந்தனை, தமிழ் தேசியம் பேசுபவர்கள் போன்றவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால், தமிழ் சினிமாவில் கடவுள் மறுப்பு, ஹிந்து எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்துத்துவா எதிர்ப்பு போன்றவை சற்றே தூக்கலாக இருக்கும். அதற்கேற்றார்போலவே, சில நடிகர், நடிகைகளும் மேற்படி சிந்தாந்தவாதிகளாவே இருக்கிறார்கள். இவர்கள், திராவிட கழகத்தினரும், தி.மு.க.வினரும் என்ன தவறு செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதேபோல, தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தாலும் கண்டும் காணாமல் இருப்பார்கள்.

அதேசமயம், அ.தி.மு.க. ஆட்சியிலோ, மத்திய பா.ஜ.க. ஆட்சியிலோ எதாவது நடந்து விட்டால், கருத்து கந்தசாமிகளாக பொங்கி எழுந்து ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைப்பார்கள். உதாரணமாக, இயக்குனர்கள் மணிவண்ணன், வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், நடிகர்கள் கமல், சித்தார்த், சூர்யா, கார்த்தி, பிரகாஷ்ராஜ், சூரி, நடிகைகள் ஜோதிகா, சாய் பல்லவி என அடுக்கிக்கொண்டே போகலாம். எனினும், இவர்களில் சில இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகளில் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களும் உண்டு. ஆனால், இவர்கள் மிகவும் சொற்பமே. எனினும், இவர்கள் தைரியமாக வாய்திறந்து எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள். காரணம், சங்கி முத்திரை குத்தப்படும். அந்த வகையில், தற்போது புதிதாக சங்கி முத்திரை குத்தப்பட்டிருப்பவர் நடிகர் விஷால்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லத்தி’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த சூழலில், ஆன்மிகப் பயணமாக தனது குடும்பத்தினருடன் காசிக்குச் சென்றிருந்தார் விஷால். அங்கு அவருக்கு சிறப்பான தரிசனம் கிடைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர், பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பதிவில், “அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றிருந்தேன். அங்கு அற்புதமான தரிசனம் மற்றும் பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி விஸ்வநாதர் கோயிலை புதுப்பித்து, இன்னும் அற்புதமாகவும், எல்லோரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையிலும் நீங்கள் மாற்றம் செய்திருக்கிறார்கள். அதற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது போதாதா திராவிட உ.பிஸ்களுக்கு… விஷாலை சங்கியாக உருமாற்றம் செய்து, தங்களது இஷ்டப்படியெல்லாம் வசைபாடி வருகிறார்கள். அது சரி, பழுத்த மரம்தானே கல்லடி படும்.


Share it if you like it