தமிழகத்தில் பாஜக – அதிமுக இடையே கூட்டணியின் முருகல் இறுதியை எட்டி உள்ளது. பூசல் முற்றிய நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட்டால் யாருக்கு லாபம்? என்ற வகையில் தனியார் அலைவரிசை ஒன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் பட்சத்தில் அதிமுகவிற்கு லாபம் என்று 24.9% , மக்களும் பாஜகவுக்கு நன்மை – லாபம் என்று 51.1% மக்களும் , அதிமுக பாஜக இருவருக்குமே நஷ்டம் என்று 23.9% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக கூட்டணி முறிவால் அதிமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதிமுக பாஜக கூட்டணி முறிவை தமிழகம் முழுவதிலும் பாஜக மற்றும் இந்து அமைப்பு சார்ந்தவர்கள் திருவிழா போல் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.