கேரள அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாணவ – மாணவியர் இடையே திரை அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமாக கேரள இருந்து வருகிறது. அம்மாநில முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். இவர், முதல்வராக பதவி ஏற்ற பின்பு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது.
பா.ஜ.க தொண்டர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் திட்டமிட்டே ஆளும் கட்சியின் குண்டர்களால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேண்டிய ஆட்களை தேர்வு செய்யும் மையமாக மெல்ல மெல்ல கேரளாவை மாற்றி வருகின்றனர். இது ஒருபுறம் என்றால், கேரள முதல்வர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அட்டூழியங்கள் மற்றும் அடாவடிகள் முன்பை காட்டிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுதவிர, ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மத அடிப்படைவாதிகள் பின்பற்றும் பழமைவாத சிந்தனைகள் தற்பொழுது மெல்ல மெல்ல கேரளாவிலும் தலைதூக்க ஆரம்பித்து இருக்கின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் அமைந்து இருக்கிறது.
கேரளா மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவ கல்லுாரியில் இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இதில், பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் திரை ஒன்று போடப்பட்டு தனித்தனியே அவர்கள் பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த புகைப்படம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இதற்கு, அம்மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இக்கருத்தரங்கை, ஏற்பாடு செய்த அப்துல்லா பசிலிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது அவர் திமிருடன் பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.