ஆப்கனில் ஐ.எஸ். தீவிரவாதிகள்! அமெரிக்கா எச்சரிக்கை

ஆப்கனில் ஐ.எஸ். தீவிரவாதிகள்! அமெரிக்கா எச்சரிக்கை

Share it if you like it

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை கூறியிருக்கிறார் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் தலைவர் கென்னத் மெக்கென்ஸி.

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் தாலிபான்கள், பெண்கள் கல்வி கற்கக்கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளின் தண்ணீர் தொட்டிகளில் விஷத்தை கலந்தும், வகுப்பறைகளில் விஷவாயுவை தெளித்தும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால், தாலிபான்கள் மீது இஸ்லாமிய பெண்கள் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில், 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் தலைநகர், வர்த்தகத் தலைநகர் இரட்டை கோபுரம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியது அல் கொய்தா தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதில், ஒடாமா பின்லேடன் கொல்லப்பட்டான். இதன் பிறகு, 2004-ல் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து தாலிபான்களின் ஆட்சியை அகற்றியதோடு, அவர்களை நாட்டை விட்டும் துரத்தின. பின்னர், அங்கு ஜனநாயக ஆட்சி அமல்படுத்தப்பட்டு, புதிய அரசு பதவியேற்றது.

எனவே, ஆப்கானிஸ்தானின் புதிய அரசுக்கு பாதுகாப்பாக நேசநாடுகளின் படையும் அங்கேயே முகாமிட்டிருந்தது. இப்படி 20 ஆண்டுகாலம் ஜனநாயக ஆட்சி நடந்து வந்த நிலையில், இடைப்பட்ட காலத்தில் தாலிபான்கள் மீண்டும் தங்களது படைபலத்தை திரட்டனர். தொடர்ந்து, நேட்டோ படைகள் மீதும், ஆப்கானிஸ்தான் ராணுவம் மீதும் கொரில்லா தாக்குதல்களை நடத்தினர். இதனால், ஆப்கானிஸ்தான் அரசு நிலைகுலைந்தது. பின்னர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். இதனிடையே, அமெரிக்காவும், நேசநாடுகளும் படையை வாபஸ் பெற்றன.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபர், துணை அதிபர் ஆகியோர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டனர். இதனால், அந்நாட்டின் முழு கட்டுப்பாடும் தாலிபான்கள் வசம் வந்து விட்டது. இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் தலைவர் கென்னத் மெக்கன்ஸி. இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட அண்டை நாட்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நினைத்து கவலைப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஸ்டானிஸ்லாவ் ஜாஸ் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட வெளிநாட்டு பயங்கரவாத குழுக்கள் மீள் எழுச்சி பெறுவது, அந்நாட்டுக்கு மட்டுமன்றி முழு பிராந்தியத்துக்குமே அச்சுறுத்தலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். எனினும், தங்களது நாட்டில் ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் இருப்பதை தாலிபான்கள் மறுத்திருக்கிறார்கள்.


Share it if you like it