அக்னி பாத்  – பாரதம் வலுப்பெற எதிர்காலத்தில் அக்னிப்பாத் திட்டத்தை கட்டாயமாவது அவசியம் !

அக்னி பாத் – பாரதம் வலுப்பெற எதிர்காலத்தில் அக்னிப்பாத் திட்டத்தை கட்டாயமாவது அவசியம் !

Share it if you like it

ஒரு தேசத்தின் பாதுகாப்பு என்பது அந்த தேசத்தின் மனித வளத்தை பொருத்தே அமையும். வளமான மனித வளம் நேர்மறை எண்ணங்கள் கடுமையான உழைப்பு விடா முயற்சி போட்டி மனப்பான்மை போர்குணம் என்னும் தகுதிகள் தான் நாட்டு மக்களை உடல் அளவிலும் மனதளவிலும் வலுவாக கட்டமைக்கும். வலுவான உடலும் மனமும் உடையவர்கள் தான் தங்களையும் தற்காத்து தேசத்தையும் பாதுகாக்க முடியும். இதன் அடிப்படையில் தான் இந்த மண்ணில் காலம் காலமாக வீர விளையாட்டுகளும் போர் பயிற்சிகளும் ஆண் பெண் அனைவருக்கும் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியாக போதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் விருப்பப்பட்டு இருந்தாலும் அடிப்படையில் அனைவரும் போர்க்கலையில் குறிப்பிட்ட தகுதி பெற்றிருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் கடந்த காலங்களில் மண்ணும் மக்களும் பாதுகாப்பாக வாழ முடிந்தது. அதன் தொடர்ச்சியாக தான் மத்திய அரசு பாரதத்தின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பை எந்த அச்சுறுத்தலையும் கடந்து தக்க வைக்கும் வகையில் ஒரு வலுவான ராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் அக்னி பாத் என்னும் தேசத்தை ராணுவ மயமாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் பள்ளிக்கல்வியும் 18 வயது பூர்த்தியான ஆண் பெண் இருபாலரும் விருப்பம் உள்ளவர்கள் இந்திய ராணுவத்தின் குறைந்த கால இராணுவ சேவை பிரிவான அக்னிபாத்தில் தன் விருப்பத்தின் தங்களை இணைத்துக் கொள்ள முடியும் . 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை குறுகிய கால பயிற்சியை முடித்த பிறகு அவர்கள் ராணுவம் துணை ராணுவ பிரிவில் பணியாற்ற முடியும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றுவதும் அதன் பிறகு அவர்கள் விருப்பத்தின் பேரிலும் தகுதியின் அடிப்படையிலும் அவர்கள் ராணுவத்தில் தொடரவும் வாய்ப்பளிக்கப்படும்.

இந்த திட்டத்தினால் வயது வந்த இரு பாலரும் தன் விருப்பத்தின் பேரில் ராணுவத்தில் இணைவதன் மூலம் ராணுவ பயிற்சி பெற்ற ஒரு பெரும் சமூகம் கட்டமையும். அதன் காரணமாக எந்த ஒரு இக்கட்டான நிலையையும் எதிர்கொள்வதற்கு தேசம் எப்போதும் தயாராக இருக்கும். ராணுவத்தின் பயிற்சிகள் காரணமாக வலுவான உடல் கட்டமைப்பு மனவளம் உள்ள ஆக்கபூர்வமான நேர்மறை சமூகம் உருவாகும். இதன் மூலம் சமூக குற்றங்கள் கலாச்சார சீரழிவுகள் வேலையில்லா திண்டாட்டம் சமூக சீர்கேடுகள் எல்லாமே முடிவுக்கு வரும். ஒரு ஆரோக்கியமான மேம்பட்ட சமூகம் உருவாகும்.

மேலும் உள்நாட்டில் உள்நாட்டில் பூகம்பம் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்லது கொரோனா போல ஏதேனும் நோய் தொற்று ஏற்படும் காலங்களிலோ தீவிரவாத தாக்குதல்கள் தாக்குதல்கள் பெரும் விபத்துகள் உள்ளிட்ட அசாதாரண நேரங்களிலோ பரவலாக இருக்கும் ராணுவ பயிற்சி பெற்ற பொதுமக்களின் மூலமாக பேரழிவுகள் தடுக்கப்படும். பெரிய அளவிலான பொருளாதார சேதங்கள் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படும். இதுபோன்ற இராணுவ பயிற்சி பெற்ற பொதுமக்கள் உள்நாட்டில் பரவலாக இருந்திருந்தால் கடந்த காலங்களில் கட்ச் பூகம்பம். மும்பை தாக்குதல். சமயத்தில் உயிரிழப்புக்களை குறைத்திருக்கலாம். அசாதாரண சூழல்களை எதிர்கொள்ள உரிய முன்னறிவி முன்னெச்சரிக்கையும் விழிப்புணர்வும் உள்ள ஒரு மேம்பட்ட சமூகம் உருவாகும்.

பத்தாண்டுகள் ராணுவ சேவையில் இருந்தாலும் ஆயுள் முழுவதும் அவர் ஒரு ராணுவ வீரராகவே கௌரவிக்கப்படுவார். ராணுவ வீரர்களுக்கு உண்டான எல்லா சலுகைகளும் அவர்களும் அவர்களின் குடும்பமும் அனுபவிக்க முடியும். பத்து ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஒரு பெரும் தொகையோடு சேவையிலிருந்து விடுபடுவீர்கள் சுய தொழில் வேலை வாய்ப்பு என்று ஏதேனும் ஒரு வகையில் வளமான வாழ்வை பெற முடியும். ராணுவ சேவைக்காக அவர்களுக்கு ஒரு பெரும் தொகையும் வழங்கப்படும். இதனால் எதிர்காலத்தில் வேலையில்லா திண்டாட்டம் பொருளாதார இடர்பாடுகள் இல்லாத நிலை உருவாகும். சுய தொழில் முனைவோர்கள் ஏராளம் உருவாகும் வாய்ப்புகள் அமையும். இப்படி எல்லா வகையிலும் தேசத்தின் பாதுகாப்பிற்கும் வளமான பொருளாதார கட்டமைப்பிற்கும் ஒருசேர பங்களிப்பு வழங்குவது தான் பாரதத்தின் அக்னிப்பாத் ராணுவத் திட்டம் .

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி ஆர்எஸ்எஸ் காரர்களை மத்திய அரசு பணியாளர்களாக மாற்றும் முயற்சி என்று அவதூறு பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தது. குறிப்பாக போராளிகள் ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சீன பாகிஸ்தான் அடிவருடிகள் இந்த அக்னிப்பாத் திட்டத்தை முழுமூச்சாக எதிர்த்து விஷம பிரச்சாரம் செய்தார்கள். அவர்களின் ஒரே நோக்கம் எந்த காலத்திலும் இந்த பாரத தேசம் ராணுவ ரீதியாக பலப்பட்டு விடக்கூடாது. சீனா பாகிஸ்தான் உள்ளிட்ட அவர்களின் விசுவாசமான நாடுகளை எதிர்கொள்ளும் வல்லமை பாரதத்திற்கு எந்த காலத்திலும் வந்து விடக்கூடாது. இரு நாடுகளும் ஒன்றிணைந்து போர் தொடுக்கும் பட்சத்தில் பாரதம் முழுமையாக பேரழிவை எதிர்கொள்ள வேண்டும் என்ற கெடுமதி மட்டுமே அவர்களின் எண்ணமாக இருந்தது. அதனால் இந்த அக்னிப்பாத் திட்டத்தை பற்றி மக்களிடையே விஷம் பிரச்சாரம் செய்து அதற்கு எதிரான ஒரு மனநிலையை மக்களிடம் உருவாக்க ஒன்றிணைந்தார்கள். ஆனால் அத்தனையும் கடந்து அக்னிப்பாத் திட்டம் செயல்படத் தொடங்கியது . அதன் முதல் பயிற்சி காலம் முடிந்து அக்னி பாத் வீரர்கள் தங்களது ராணுவ சேவைகளையும் தொடங்கி விட்டார்கள்.

தேசத்தின் குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் இளைய தலைமுறையில் அனைவரும் ராணுவ பயிற்சி பெற்ற பயிற்சி பெற்ற எண்ணிக்கை மக்கள் தொகையில் கணிசமாக உயரும். கால் நூற்றாண்டுகளுக்கு பிறகு ராணுவ பயிற்சியும் போர் பயிற்சியும் இல்லாத குடிமக்களே தேசத்தில் இல்லை என்ற நிலை வரலாம் . அப்போது பாகிஸ்தான் சீனா போன்ற பகைநாடுகள் மட்டுமல்ல .ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்று திரண்டு வந்தாலும் வந்தாலும் பாரதத்தை வெல்ல முடியாது என்ற நிலை வரும் . அது ஒன்றே இந்த தேசத்தை அதன் தேசியத்திலும் தர்மத்திலும் வழுவாது வெற்றிகரமாக நிலை நிறுத்தும். இந்த தொலைநோக்கு சிந்தனையில் மறைந்த முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராபத் அவர்களின் கனவு திட்டமாக உதித்தது தான் அக்னிப்பாத் திட்டம் ‌ அன்று அக்னிப்பாத் திட்டத்தை தேவையற்ற திட்டம் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று கண்முன்னே இஸ்ரேல் எதிர்கொள்ளும் சிக்கலையும் ஆனால் அத்தனை நெருக்கடிகளையும் கடந்து இஸ்ரேல் தன்னம்பிக்கையுடன் துணிந்து நிற்பதன் பின்னணியையும் யோசித்துப் பார்த்தால் அவர்களுக்கு அக்னிப்பாத் திட்டத்தின் அருமை புரியும்.


Share it if you like it