மார்ச் 8 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு (AI) மிஷன் என்னும் திட்டத்திற்கு 10,371.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
‘இந்தியா ஏஐ மிஷன்’ திட்டத்தின் கீழ், நாட்டில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கம்பியூட்டிங் திறனை அதிகரிக்க விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், செயற்கை நுண்ணறிவு துறையில் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் Seed Funding அதாவது துவக்க முதலீடுகளை இந்தத் திட்டத்தின் நிதியில் இருந்து வழங்கப்படும். இந்தியா ஏஐ மிஷன் மொத்த ஒதுக்கீடு ரூ.10,371.92 கோடி ஆகும். இந்த நிதியைப் பெருமளவில் பெரிய கம்பியூட்டிங் கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் ஒன்று தான் இந்த India AI Mission. இத்திட்டத்தின் கீவ் 10,000 க்கும் மேற்பட்ட GPUக்களைக் கொண்ட supercomputing capacity உருவாக்கவும், இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு சூழலை இந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இந்தியா ஏஐ இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்பியூட்டிங் கட்டமைப்பை ஸ்டார்ட்அப்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். India AI Missionகீழ் ஒரு தேசிய தரவு மேலாண்மை அதிகாரி நியமிக்கப்படுவார். இந்த அதிகாரி ஏஐ சார்ந்து இருக்கும் பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, தரவின் பாதுகாப்பு, பயன்பாட்டுத் தன்னமை, நிர்வாகம் என அனைத்தும் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.