பிரதமர் நரேந்திர மோடி இன்று ஐம்மு காஷ்மீர் செல்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மேலும் ஜம்மு காஷ்மீரில் சாலை, ரயில்வே இணைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். அதைதொடர்ந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் பிரதமர் பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், பிரதமர் வருகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1660 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமராக மோடி பதவி ஏற்பதற்கு முன்பு எப்போது பார்த்தாலும் கலவரம், துப்பாக்கிசூடு, வெடிகுண்டு, தீவிரவாதம் என இருந்த ஜம்மு காஷ்மீரை மோடி பிரதமராக ஆனதிலிருந்து அனைத்து விதமான கலவரங்களும், தீவிரவாதங்களும் அடியோடு முடித்து வைக்கப்பட்டன. அதற்கு மாறாக பல வருடங்களாக பூஜைகள் நடைபெறாமல் இருந்த கோவில்களில் இன்று பூஜைகள் செய்து நைவேத்யம் படைத்து தரிசனம் செய்கின்றனர். அடிப்படை வசதியற்ற ஜம்மு காஷ்மீரை பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை, சாலை வசதிகள், ரயில்வே என கலவர பூமியாக இருந்த ஜம்மு காஷ்மீரை இன்று சுற்றுலா பூமியாக பிரதமர் மோடி மாற்றி காட்டியுள்ளார். இவ்வாறு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.