ஒரு மனைவி… 3 வைப்பாட்டி… ஹிந்துக்களை அவதூறாக பேசிய ஒவைசி கட்சித் தலைவர்!

ஒரு மனைவி… 3 வைப்பாட்டி… ஹிந்துக்களை அவதூறாக பேசிய ஒவைசி கட்சித் தலைவர்!

Share it if you like it

ஹிந்துக்கள் ஒரு பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டு, தாலி கட்டாமல் வைப்பாட்டியாக 3 பெண்களை வைத்திருக்கிறார்கள் என்று ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் பேசியிருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை, இஸ்லாமியர்களுக்கு எதிராக என்ன பேசினாலும் சர்ச்சையாகிறது. பேசுபவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. உதாரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, இஸ்லாமிய மத நூலான குரானில் இடம்பெற்றிருந்த ஒரு கருத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். இந்த விவகாரம் இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பல இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, நுபுர் ஷர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அது மட்டுமல்ல, நுபுர் ஷர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போதுவரை அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. மேலும், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு கன்ஹையா லால் உட்பட 2 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. அதேசமயம், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதியான தஸ்லிம் ரஹ்மான், சிவலிங்கம் பற்றி மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார். ஆனால், அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இதுதான் இந்தியாவின் இன்றைய நிலையாக இருந்து வருகிறது.

இந்த சூழலில்தான், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியின் மாநிலத் தலைவர் ஹிந்துக்கள் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இஸ்லாமிய பெண்களுக்கு சமூகத்தில் கௌரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்கு பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். எந்தவொரு முஸ்லீம் ஆணும் 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு தெளிவாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான், சம்பாலில் நகரில் நடந்த பேரணியில் பேசிய உத்தரப் பிரதேச மாநில ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் சவுகத் அலி, “நாங்கள் இரண்டு, மூன்று பேரை திருமணம் செய்து கொள்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் எங்கள் மனைவிகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறோம். சமூகத்திலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களோ (ஹிந்துக்கள்) ஒருமுறை திருமணம் செய்து கொண்டு, 3 பேரிடம் தொடர்பில் இருக்கிறீர்கள். இதை யாரிடமும் சொல்வதுமில்லை, உங்கள் மனைவிகளை மதிப்பதுமில்லை. எங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால், உங்களின் குழந்தைகள் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்” என்று அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியிருக்கிறார்.

இவரது இந்த பேச்சுதான் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவியை மதிப்பது ஹிந்துக்களா, இஸ்லாமியர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். பெண்களை தெய்வமாக போற்றி வணங்குபவர்கள் ஹிந்துக்கள். சமூகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்தவர்கள் ஹிந்துக்கள். ஆனால், இஸ்லாமியர்கள் அப்படியா? முத்தலாக் சட்டம் கொண்டுவரப்படும் வரை இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை மதில் மேல் பூனையாகவே இருந்து வந்தது. ஆகவே, ஹிந்துக்களைப் பற்றிப் பேச சவுகத் அலிக்கு அருகதை இல்லை என்று குமுறி வருகிறார்கள்.


Share it if you like it