நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்

நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்

Share it if you like it

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இளவரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக வழங்கினார். அந்த நாய்க்குட்டிக்கு நூரி என்று பெயரிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஏ ஐஎம்ஐஎம் கட்சியை சார்ந்த முகமது பர்கான் உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யராஜ் மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் இதில் ராகுல் காந்தி அவரது தாயார் சோனியா காந்திக்கு செல்லப்பிராணியாக நாய்க் குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த நாய்க்குட்டிக்கு அவர் நூரி என்று பெயர் சூட்டியிக்கிறார். ஒரு நாய்க்குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்தது எங்களின் இஸ்லாமிய மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது. அவரின் செல்ல நாய்க்கு நூரி என்னும் இஸ்லாமிய மதம் சார்ந்த பெயரை வைத்ததன் மூலம் அவர் எங்களையும் எங்களின் மத உணர்வுகளையும் புண்படுத்தி இருக்கிறார் . அவமதித்து இருக்கிறார் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கைத் தொடர்ந்த முகமது ஃபார்கான் சார்ந்த கட்சியின் தலைவர் பிரபல இஸ்லாமிய தலைவர்அக்பர் அவைசி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் காங்கிரசின் ஆட்சிக்காலம் முதல் தற்போது வரை காங்கிரசுக்கும் இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளுக்கும் ஒரு இணக்கமான புரிந்துணர்வும் தேர்தல்களில் நெருங்கிய கூட்டணி உறவும் இருந்து வரும் நிலையில் ஒரு இஸ்லாமிய கட்சி சார்ந்தவரே ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனது நாய் குட்டிக்கு நூரி என்று ராகுல் காந்தி பெயர் வைத்ததன் மூலம் தங்களின் மத நம்பிக்கைகள் உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதை இனி ராகுல் காந்தி சட்டப்படி நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும். என் வீட்டு நாய்க்குட்டிக்கு என் விருப்பப்படி நான் பெயர் வைத்ததால் உங்களின் மத உணர்வுகள் எப்படி புண்படுகிறது ? இதில் நான் எப்படி உங்களின் மத உணர்வுகளை நம்பிக்கைகளை புண்படுத்த முடியும்? என்று ராகுல் காந்தியாலோ அவரது வழக்கறிஞர்களாலோ கேள்விகள் எழுப்ப முடியும். இந்த வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய முடியும். ஆனால் நிச்சயம் ராகுல் காந்தியும் அதை செய்ய மாட்டார். அவரது காங்கிரஸ் கட்சியும் அதை அனுமதிக்காது. காரணம் இஸ்லாமிய ஓட்டு வங்கி கிறிஸ்தவ ஓட்டு வங்கி என்னும் சிறுபான்மையினரின் வாக்கு வாங்கி மட்டுமே இன்றளவும் காங்கிரசை ஆட்சிக்கட்டில் அமர்த்தி இருக்கிறது. அதற்காகத்தான் காங்கிரஸ் கட்சி இங்குள்ள பெரும்பான்மை மக்களையும் அதன் தர்மத்தின் வழிகளையும் இது நாள் வரை வஞ்சித்து வந்திருக்கிறது. அதனால் அந்த வாக்கு வங்கியில் ஒருபோதும் காங்கிரஸ் விஷப்பரிட்சை மேற்கொள்ளாது.

மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எப்படியெல்லாம் பெரும்பான்மை மக்களை துவேஷிக்கலாம்? அதன்மூலம் சிறுபான்மை மக்களை எப்படி குளிர்வித்து அவர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறலாம் ? அதன் மூலம் எப்படியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்று கனவு கண்டு இருக்கும் கண்டு காத்திருக்கும் காங்கிரஸ் கட்சி நிச்சயம் இஸ்லாமியர்களின் எந்த ஒரு கேள்விக்கும் எதிர் கேள்வி எழுப்பவோ விவாதம் செய்யவும் முன் வராது. அவர்கள் ஓங்கி அறைந்தால் கூட என்னை அடித்து விட்டார்கள் என்று புகார் கூட தெரிவிக்காது. அவர்கள் கையை வேகமாக ஓங்கும் போது நான் குறுக்கே போய்விட்டேன். இது எதைச்சையாக நடந்த விபத்து என்று சொல்லித்தான் காங்கிரஸ் விவகாரத்தை முடித்து வைக்கும் .அதன் வரலாறு அப்படி . இன்று அதன் தலைவிதியும் அப்படித்தான்.

ஆனால் இத்தனை காலமும் இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு சகிப்புத்தன்மை பெருந்தன்மை சகோதரத்துவம் நல்லெண்ணம் மனிதன் பற்றி எல்லாம் பாடம் நடத்தியவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் ? என்று தெரியவில்லை. இதே தேசத்தில் எத்தனை எத்தனை சிறுபான்மை அமைப்பினரின் நிகழ்ச்சிகள் பொது மேடைகளில் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு முறைகளில் இருக்கும் சிலை வழிபாடு உருவ வழிபாடு வழிபாட்டு முறைகள் ஆன்மீக நம்பிக்கைகள் எல்லாம் எவ்வளவு தூரம் இழிவு படுத்தி பேசப்பட்டிருக்கும்? எத்தனை எத்தனை ஆலயங்கள் சிதைக்கப்பட்டிருக்கும்? இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் இந்து மக்களின் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் உற்சவங்களில் எவ்வளவு இடையூறுகள்? அவற்றையெல்லாம் தடுத்து தகர்த்து பண்டிகைகளை கொண்டாட இன்றளவும் இந்து மக்கள் நீதிமன்றங்களின் வழியாக சட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்து மக்களின் உணர்வுகளும் அவர்களின் ஆன்மீக நம்பிக்கையும் எவ்வளவு தூரம் புண்பட்டு இருக்கும் ? அவர்களின் மத நம்பிக்கைகள் எவ்வளவு தூரம் அவமானப்படுத்தப்பட்டு இருக்கும்? என்பதை இங்கு யாரும் யோசிக்க கூட நேரம் இல்லை. காரணம் சிறுபான்மை வாக்கு வங்கியும் அதன் பின்னிருக்கும் பின் இருக்கும் கூட்டணி அரசியல் பாசமும் அவர்களின் கண்களை அறிவை கட்டி வைத்தது இன்று இவர்களின் செயல் அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டது என்று அவர்கள் நீதிமன்றத்தின் கதவுகளை போய் தட்டுகிறார்கள். இதுதான் வளர்த்த கடா மார்பில் பாயும் கதை.

இனி அடுத்து என்ன நடக்கும்? நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராவார். சட்டத்தை மதித்து அதன் வழியில் நான் நீதிமன்றம் வந்திருக்கிறேன் என்று அதற்கும் ஒரு பெரிய சாதனை வரலாறு பேசுவார் . அதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்களின் உணர்வுகள் நம்பிக்கைகள் புண்பட்டிருந்தால் நான் அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பு கேட்கிறேன் என்று சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். அதோடு நான் உடனடியாக எனது நாய்க்கு இந்த பெயரை மாற்றி விடுகிறேன். வேறு பெயரை வைத்துக் கொள்கிறேன். என்று உறுதிமொழியும் கொடுப்பார் . முடிந்தால் நாங்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் இனி எந்த ஒரு செல்லப் பிராணிக்கும் அல்லது வேறு எந்த ஒரு விலங்குகளுக்கோ இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி பெயர் வைக்கவோ அடையாளம் வைக்கவோ முடியாதபடி ஒரு சிறப்பு சட்டத்தை இயற்றுகிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டு வருவார். செய்தால் ஆச்சரியப்படுபவர்கள் இல்லை .

காரணம் ஆட்சி அதிகாரம் கைக்கு வருமானால் அதற்கு காரணமான சிறுபான்மை வாக்கு வாங்கி அரசியல் சிந்தாமல் சிதறும் கிடைக்குமானால் அதற்காக தேசத்தையே பலி கொடுக்கவும் தயங்காத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டத்தை இயற்றுவதோ அதற்கான வாக்குறுதியை கொடுப்பதோ ஒரு விஷயமே இல்லை. கடந்த கால காங்கிரசின் ஆட்சியையும் அதில் இயற்றப்பட்ட சட்டங்கள் அதன் பின்னிருக்கும் பெரும்பான்மை விரோத சூழ்ச்சிகளையும் சிறுபான்மை ஆதரவு ஆதரவு வாக்கு வங்கி அரசியலையும் ஆழ்ந்த ஊடுருவி பார்ப்பவர்களுக்கு காங்கிரஸின் உண்மை முகம் புரியும். சமீபமாக கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களின் தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சார்பில் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்பட்டிருக்கும் சலுகைகள் அதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த பிறகு முன்னெடுக்கப்படும் நடைமுறைகள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தாலே காங்கிரசுக்கும் சிறுபான்மை வாக்கு வங்கிக்கும் இருக்கும் ரகசிய புரிந்துணர்வு புரியும். தங்களின் ஆட்சி அதிகாரத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் காங்கிரஸ் பெரும்பான்மை மக்களுக்கு இந்த தேசத்திற்கு எந்த கெடுதலையும் செய்ய தயங்காது. அதே நேரத்தில் எந்த ஒரு வாக்கு வங்கி அரசியல் என்று வந்தால் யாருடனும் கள்ள உறவு கொள்ளவும் தயங்காது என்பதும் தெளிவாகப் புரியும்.

மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வன்மத்தோடு அவதூறு பேசி அதற்கான வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு சிறை தண்டனையும் பெற்றபோது பெரும்பான்மை சமூகத்திற்கு மனிதாபிமான பாடம் எடுத்தவர்கள். இதன் பின்னும் மோடியும் அவரின் அரசும் தான் இருக்கிறது ? என்று அவதூறு பேசியவர்கள் யாரும் இன்று அக்பர் அவ்வைசியின் தலைமை பற்றியோ அவரது கட்சி பற்றியோ அவரது கட்சியின் நிர்வாகி ராகுலுக்கு எதிராக தொடர்ந்திருக்கும் வழக்கு பற்றியோ வாயே திறக்கவில்லை. இதுதான் இங்குள்ள எதார்த்த நிலை. இதை இங்குள்ள பெரும்பான்மை மக்கள் உணர்ந்து விழித்துக் கொண்டால் வரலாற்றில் நம் முன்னோர்கள் கடந்து வந்த துரோகங்களையும் வஞ்சகங்களையும் எதிர்காலத்தில் நம் சந்ததிகள் எதிர்கொள்ளாமல் தடுக்க முடியும்.


Share it if you like it