ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் ஐய்யன் ஆப் !

ஐயப்ப பக்தர்களுக்கு வழிகாட்டும் ஐய்யன் ஆப் !

Share it if you like it

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு, கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப சுவாமி திருக்கோவிலில், மண்டல காலத்தையொட்டி, மகரவிளக்கு பூஜைக்காகக் கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், ஐய்யன் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் ஐய்யன் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள், கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதைகள், வனப் பகுதியில் வேண்டியவை, செய்யக் கூடாதவை, அவசரக் கால உதவி மையம், தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மின்சார வாரியம், ரயில்வே விசாரணை மையம், போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை ஆகியவற்றின் தொடர்பு எண்கள் மற்றும் அது தொடர்பான கூடுதல் தகவல்கள் இந்த ஆப்பில் இடம் பெற்றுள்ளன. பக்தர்கள் தங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு உபயோகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it