‘வலிமை’ அஜித் ரசிகர்கள் ஆவேசம்… ப்ளு சட்டை மாறனுக்கு கும்மாங்குத்து!

‘வலிமை’ அஜித் ரசிகர்கள் ஆவேசம்… ப்ளு சட்டை மாறனுக்கு கும்மாங்குத்து!

Share it if you like it

நடிகர் அஜித்தை பற்றி கடுமையாக விமர்சித்துவந்த ப்ளு சட்டை மாறனை, நையப்புடைத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

தமிழ் திரைப்பட உலகில் வலம் வருபவர் ப்ளு சட்டை மாறன். அதிகமாக நீலக் கலரில் சட்டை அணிந்திருப்பதால், ப்ளு சட்டை மாறன் என்று பெயர் வந்தது. இதன் பிறகு, ப்ளு கலர் சட்டை அணிவதை வாடிக்கையாக்கி கொண்டார். இயக்குனர், கதாசிரியர், சினிமா விமர்சகர் என பல அவதாரம் எடுத்தவர். ஒரு படம் வெளியானால், ப்ளு சட்டை மாறினின் விமர்சனம் என்ன என்பதை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆகவே, இவர் இஷ்டத்துக்கு படங்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக, அஜித் படங்களை அதிகமாக விமர்சனம் செய்தார். அதோடு, அஜித் மீது தனி நபர் தாக்குதலிலும் ஈடுபட்டு வந்தார். அப்படி அஜித்துக்கும் மாறனுக்கு என்னதான் பிரச்னை என்பது தெரியவில்லை. அதேசமயம், அஜித்துக்கு போட்டியாக விஜய் படங்களுக்கு நல்ல ரிவியூ கொடுத்தார்.

நிலைமை இப்படி இருக்க, அஜித் நடித்து வெளியான விவேகம் படத்தை தாறுமாறாக விமர்சனம் செய்திருந்தார் ப்ளு சட்டை மாறன். இதனால், மாறன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர் அஜித் ரசிகர்கள். இந்த நிலையில்தான், அஜித் நடித்த வலிமை படம் சமீபத்தில் ரிலீஸானது. இப்படத்தைப் பார்த்த பலரும் வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக, பைக் ரேஸ் காட்சிகள் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். ஆனால், ப்ளு சட்டை மாறனோ, கலாய்க்கக்கூட தகுதியில்லாத படம் வலிமை என்று மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு, அஜித்தின் நடனம், அவரது உடல் அமைப்பு ஆகியவை பற்றியும் மிகவும் கீழ் தரமாக விமர்சனம் செய்திருக்கிறார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள், ப்ளு சட்டை மாறனை எந்த இடத்தில் பார்த்தாலும் உதைப்போம் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில்தான், சென்னையிலுள்ள பி.வி.ஆர். தியேட்டருக்கு இன்று படம் பார்க்க வந்திருந்தார் ப்ளு சட்டை மாறன். அங்குதான், அவரை அஜித் ரசிகர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல், தியேட்டரில் யாரோ அவரிடம் தகராறு செய்வதுபோல போட்டோ வெளியாகி இருக்கிறது. மேலும், முகத்தில் ஒருவித பயம் கலந்த அதிர்ச்சியுடன் மாறன் நிற்கும் போட்டோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ப்ளு சட்டை மாறன் தாக்கப்பட்டதாக செய்தி அறிந்ததும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விட்டனர். ஆனால், மாறன் தரப்போ தான் தாக்கப்பட்டது குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை. அதேசமயம், தான் தாக்கப்பட்டதாக வெளியான போட்டோ குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் மாறன், எனது போட்டோவை வைரலாக்கிய தம்பிக்கு நன்றி என்று மட்டும் கூறியிருக்கிறார். ஆகவே, மாறன் தாக்கப்பட்டரா இல்லையா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.


Share it if you like it