பயங்கரவாதத் தொடர்பு: ஆம்பூர் அனர் அலி கைது!

பயங்கரவாதத் தொடர்பு: ஆம்பூர் அனர் அலி கைது!

Share it if you like it

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் கூறி, ஆம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அனர் அலியை லோக்கல் போலீஸார் உதவியுடன் மத்திய உளவுப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.), சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளான அல்கொய்தா, அல் உம்மா, தடை செய்யப்பட்ட சிமி இயக்கம், பங்களாதேஷைச் சேர்ந்த அன்சாருல் இஸ்லாம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஆகவே, தேசிய புலனாய்வு அமைப்பினர் தமிழகத்தில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த ஆசிப் முசாப்தீன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த சூழலில்தான், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆம்பூரைச் சேர்ந்த அனல் அலி என்கிற கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவைச் சேர்ந்தவர் அனர் அலி. இவர், ஆற்காடு அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, லோக்கல் போலீஸார் உதவியுடன் மத்திய புலனாய்வு போலீஸார் அனர் அலி வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவருக்கும் பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அனர் அலியை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 வெளிநாட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it