600 சிறார்களை சூறையாடிய காமுக பாதிரியார்கள்: கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிர்ச்சியோ அதிர்ச்சி!

600 சிறார்களை சூறையாடிய காமுக பாதிரியார்கள்: கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் அதிர்ச்சியோ அதிர்ச்சி!

Share it if you like it

அமெரிக்காவில் செயல்படும் கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் 600 சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும், இதுதொடர்பாக 156 பாதிரியார்கள் மீது குற்றம்சாட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணமான பால்டிமோர் நகரில் 233 ஆண்டுகள் பழமையான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் அமைந்திருக்கிறது. இதுதான் பால்டிமோர் கத்தோலிக்க சபையின் தலைமை தேவாலயமாகும். இதன் கீழ் செயல்படும் தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் எழுந்து வந்தன. இது தொடர்பாக மேரிலேண்ட் அட்டர்னி ஜெனரல் அந்தோணி பிரவுண், கடந்த 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில்தான், விசாரணை நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் 463 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இதில்தான், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது, பால்டிமோர் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் 153 தேவாலயங்கள், 59 பள்ளிகள், 24 பாதிரியார் பயிற்சி பள்ளிகள், 26 கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிகள் செயல்படுகின்றன. மேற்கண்ட தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளில் பயின்ற சுமார் 600-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகளில் 156 பாதிரியார்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், திருச்சபை நிர்வாகம் அனைத்து தவறுகளையும் மூடி மறைத்து விட்டது. பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறுவர், சிறுமிகளை பாதிரியார்கள் மிரட்டியதோடு, அவர்களது பெற்றோரையும் வரவழைத்து மிரட்டி இருக்கிறார்கள். ஆனால், திருச்சபை நிர்வாகம் சம்பந்தப்பட்ட பாதிரியார்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், “பால்டிமோர் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் மட்டுமன்றி, ஏராளமான கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பாதிரியார்களும் சிறுவர், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர். கடந்த 1950 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான புள்ளி விவரங்களின்படி சுமார் 7,002 பாதிரியார்களை குற்றவாளிகளாக கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறது. இதேபோல, போர்ச்சுகல், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it