சவால்களுக்கிடையே சாதிக்கும் மோடி: டொனால்டு ட்ரம்ப் புகழாரம்!

சவால்களுக்கிடையே சாதிக்கும் மோடி: டொனால்டு ட்ரம்ப் புகழாரம்!

Share it if you like it

பல்வேறு சவால்களுக்கு இடையே பாரத பிரதமர் மோடி சாதித்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான இவர், இந்தியா மீது மிகவும் நட்பு பாராட்டினார். குறிப்பாக, பாரத பிரதமர் மோடியிடம் மிகவும் நட்போடு இருந்தார். டிரம்ப் ஆட்சி காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. ட்ரம்ப் அதிபராக இருந்தபோதுதான், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ‘ஹவ்டி மோடி’ என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்பும், பிரதமர் மோடியும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அதேபோல, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு டிரம்ப் சென்றார்.

தற்போதுவரை, ஆக்டிவ்வாக அரசியல் செய்து கொண்டிருக்கும் டொனால்டு டிரம்ப், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அடிக்கடி விமர்சித்து வருகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகளை வைத்து சோதனை நடத்தினார். இதற்கெல்லாம் அசராத ட்ரம்ப், எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தற்போதே ஈடுபடத் தொடங்கி விட்டார்.

இந்த நிலையில்தான், ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், பாரத பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி இருக்கிறார். ”பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர் என்றே நான் கருதுகிறேன். மகத்தான பணிகளை அவர் செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. மோடிக்கு முன்பு நிறைய சவால்கள் இருந்தபோதிலும், அவர் இந்தியாவை சிறப்பாக வழிநடத்துகிறார். நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it