அமெரிக்காவில் மீண்டும் இனவெறி… நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்!

அமெரிக்காவில் மீண்டும் இனவெறி… நாடாளுமன்ற உறுப்பினருக்கு மிரட்டல்!

Share it if you like it

இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க காங்கிரஸ் பெண் உறுப்பினர் தொலைபேசியில் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் சமீபகாலமாகவே இனவெறி மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக, கருப்பினத்தவர்கள் மீது அமெரிக்கர்கள் காட்டி வந்த இனவெறி, தற்போது இந்தியர்களை நோக்கியும் திரும்பி இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மெக்ஸிகனைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பெண்களிடம், இந்தியர்களை பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று சொல்லி, தாக்குதலும் நடத்தினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அமெரிக்கர் ஒருவர் போலந்து நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவரிடம், இந்தியர்களுக்கு இங்கு என்ன வேலை. இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று இனரீதியாக துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டர். இப்படி இந்தியர்களுக்கு எதிரான இனவெறி தலைவிரித்தாடும் நிலையில், அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருக்கே, இந்தியாவுக்கே திரும்பிச் செல்லுங்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரமிளா ஜெயபால். 53 வயதாகும் இவர், சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இவர்தான் அமெரிக்காவின் முதல் காங்கிரஸ் பெண் உறுப்பினர். இவரது வீடு அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கிறது. சமீபத்தில் இவரது வீட்டுக்கு வெளியே ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நின்றிருந்தார். அவரை கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவரது பிரட் ஃபோர்செல் (49) என்பது தெரியவந்தது.

இந்த சூழலில், பிரமிளா ஜெயபால் இந்தியாவுக்கே திரும்பச் செல்ல வேண்டும் என்று ஒரு மர்ம நபர் தொலைபேசியில் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதோடு, வெறுப்பு செய்திகளையும் அனுப்பி இருக்கிறார். இது தொடர்பான 5 ஆடியோ செய்திகளின் தொகுப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பிரமிளா ஜெயபால், “பொதுவாகவே, அரசியல் பிரமுகர்கள் இதுபோன்று தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெளியில் காட்ட மாட்டார்கள். ஆனால், வன்முறையை ஏற்க முடியாது என்பதால் அதை நான் இங்கு வெளிப்படுத்த முடிவெடுத்தேன். வன்முறைக்கு அடித்தளமாக இருக்கும், இனவெறி மற்றும் பாலின வெறியை தூண்டும் இதுபோன்ற செய்திகளை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அந்த ஆடியோக்களில், ஆபாசமான மற்றும் தவறான உள்ளடக்கம் காரணமாக சில பகுதிகள் திருத்தப்பட்டிருக்கின்றன. மிரட்டும் தொணியில் பேசும் அந்த நபர், பிரமிளா ஜெயபாலுக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்துவதாக அச்சுறுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கே திரும்பிச் சென்றுவிடும்படி மிரட்டுகிறார்.


Share it if you like it