ராகுல் தேறுவது ரொம்ப கஷ்டம்: வெள்ளை மாளிகை பாடகி ‘பொளேர்’!

ராகுல் தேறுவது ரொம்ப கஷ்டம்: வெள்ளை மாளிகை பாடகி ‘பொளேர்’!

Share it if you like it

ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்டால், மக்கள் அவருக்கு வாக்களிப்பது மிகவும் கடினம் என்று தோன்றுவதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகி மேரி மில்பென் கூறியிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் இந்தியாவை பற்றியும், இந்திய அரசு பற்றியும் தரக்குறைவாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், கடந்த மாதம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, சான்பிரான்ஸிகோ, வாஷிங்டன் டிசி, நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, இந்தியாவில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பேசினார். அவரது பேச்சுக்களுக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்தான், அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ பாடகியான மேரி மில்பென், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பற்றி கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ராகுல் காந்தியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது, அவர் ஆற்றிய சில உரைகளைக் கேட்டேன். அவற்றைக் கேட்கும்போது, அவருக்கு மக்கள் வாக்களிப்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது. ஒரு சிறந்த தலைவரின் அடையாளம், சொந்த நாட்டையும், அதன் பாரம்பரியத்தையும் மதிப்பதுதான். அந்த வகையில், மோடி நாட்டையும், நாட்டு மக்களையும் மிகவும் நேசிக்கிறார். இதனால், அவர் மக்கள் விரும்பும் தலைவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it