கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வன்முறை, வாரிசு அரசியல், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள டெர்டால் பகுதியில் நேற்றைய தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது அமித்ஷா இவ்வாறு பேசினார் : வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கர்நாடகா மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். எனவே அரசியல் ஸ்திரத்தன்மை தரும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். புதிய கர்நாடகம் வேண்டுமென்றால் மக்கள் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் நீங்கள் தேர்வு செய்யப்போவது வெறும் வேட்பாளர்களை மட்டும் அல்ல கர்நாடகாவின் எதிர்காலத்தைத் தேர்வு செய்யப் போகிறீர்கள். நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் கர்நாடகாவில் எதிர்காலம் பிரதமர் மோடியின் வசம் செல்லும். கர்நாடகாவில் அரசியல் ஸ்திரத்தன்மையையும், வளர்ச்சியையும் கொண்டுவர பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அமித் ஷா பேசினார்.