Share it if you like it
மேற்குவங்கத்தில், 35 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால் எதிர்வரும் 2025-ல் நமது ஆட்சியாகதான் இருக்கும் என்ற ரீதியில் அமித்ஷா பேசியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு பேசினார் : மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு அமைய மேற்குவங்க மக்கள் தங்கள் பங்களிப்பாக 35 தொகுதிகளில் வெற்றியை வழங்க வேண்டும்.
இந்த வெற்றியை நீங்கள் வழங்கினால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி 2025-க்குப் பிறகு இருக்காது. மேற்குவங்கத்தில், பா.ஜ.க. அரசு அமைந்தால் ராம்லீலா ஊர்வலங்களில் வன்முறையை ஏற்படுத்த ஒருவருக்கும் துணிவு வராது என்பதை நான் கூறிக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Share it if you like it