நாமக்கல் கவிஞர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தி.வெ .இராமலிங்கம் பிள்ளை, 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி மோகனூர் என்னும் ஊரில் பிறந்தார். அவரது தந்தை வெங்கட்ராமன் பிள்ளை, தாயார் அம்மணி அம்மாள். அவர் தந்தை ஹெட் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றியவர். இராமலிங்கர் பிறப்பதற்கு முன்னரே அவருக்கு முன்பிறந்தோர் ஏழு பெண்கள் ஆவர். அவரது பெற்றோர் தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டி தமிழ்நாடடு தெய்வங்களை வேண்டிணார் . அச்சமயம் எட்டாவது முறையாக அம்மணி அம்மையார் கருவுற்றிருந்ததார். அவ்வேளையில் இராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை சென்ற பிராமண தம்பதிகள் வழியில் மோகனூரில் சில நாட்கள் தங்கி இருந்தனர். அவர்களுக்கு வெங்கட்ராமபிள்ளையும் அம்மணி அம்மையாரும் சிறந்த பணிவிடை செய்தமையால் மகிழ்ச்சியான அப்பெரியோர் அம்மணிக்கு ஆண் குழந்தை பிறக்கும் எனவும் பிறக்கும் குழந்தைக்கு ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமலிங்க சுவாமியின் பெயர் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதன்படி எட்டாவது ஆண் குழந்தையாக பிறக்கவே, அக்குழந்தைக்கு இராமலிங்கம் என பெயரிட்டார்.
பாரத நாட்டில் மிகச்சிறந்த மனிதராக ஒருவர் திகழ்ந்தார் அதற்கு பெரும்பங்கு வகிப்பது அவரது தாயார். சாதாரண படைத்தளபதி மகனாக பிறந்த சிவா ‘ஹிந்து சாம்ராஜ்யம்’ அமைத்த சத்ரபதி சிவாஜியாக மாறுவதற்கு காரணம் சிவாஜியின் தாய் ஜிஜா பாய் ஆவார்.
‘ பிலே’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட விஷமக்கார சிறுவன் நரேந்திரன் பின்னால் விவேகானந்தராக மாறுவதற்கு காரணம் அவரது தாயார் புவனேஸ்வரி .அதுபோலவே இராமலிங்கப் பிள்ளையினுடைய தாயாரும் இதிகாச புராணங்களை எல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்ப திரும்ப சொல்லி மகனை சான்றோனாக வளர்த்தார்.
இவர் நாமக்கல்லில் தன் தொடக்கக் கல்வியை கற்றார் தனது தந்தை பனிமாற்றலாகி கோவைக்கு செல்ல வேண்டி இருந்தமையால் உயர்கல்வியை கோயம்புத்தூரில் பயின்றார் பின் 1907ஆம் ஆண்டு திருச்சியில் கல்லூரியில் சேர்ந்தார் அப்பொழுது அவரது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மனம் இல்லாமல் திருமணத்தை செய்து கொண்டார். அந்த காலகட்டத்தில் தான் வங்கப் பிரிவினை தாக்கம் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ வந்தே மாதரம்’ என்ற முழக்கம் நாடெங்கும் எதிரொலித்தது. அப்பொழுதுதான் இலக்கியத்திலும் ஓவியத்திலும் இருந்த அவர் பார்வை தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டது. திலகர், சுப்பிரமணிய சிவா, வ உ சி போன்ரோரை சந்திக்க ஆவல் கொண்டார். பாடல் கவிதை ஓவியம் தீட்டுவதில் ஆர்வமாக இருந்தார் தேசிய சிந்தனை காரணமாக விவேகானந்தர், வள்ளலார், கடவுள் உருவங்களை ஓவியமாக தீட்ட ஆரம்பித்தார்.
புகைப்படம் போல் அதே வடிவில் தோற்றம் இருக்குமாறு வரையும் திறமை பெற்ற கவிஞரது ஓவியங்கள் பிரபலமாக தொடங்கின . அப்பொழுது அவர் பணம் பெற்று பல ஓவியங்களை வரைந்தார். இந்த சமயத்தில் சைமன் என்ற ஓரு வெள்ளைக்காரனர் தனது இறந்த மகளின் ஓவியத்தை வரைந்து கொடுக்குமாறு அவரிடம் கேட்க, அவர் 75/-ரூபாய்க்கு வரைந்து கொடுப்பதாக கூறினார். மிகவும் தத்ரூபமாக ஓவியத்தை வரைந்த அவருக்கு ரூபாய் 675/- கொடுக்கிறார் சைமன் ஆனால் 75/- ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு எனக்கு உள்ளது மட்டும் போதும் என்று சொல்லி திருப்பி 600/- ரூபாய் கொடுத்து விடுகிறார். இவரது நேர்மையை பாராட்டிய சைமன் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.
— திருமதி.ராஜேஸ்வரி