அதிகாரிகளை கோர்த்துவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

அதிகாரிகளை கோர்த்துவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Share it if you like it

திருச்சி திமுக அலுவலகத்துக்கு கலெக்டர், கமிஷனர் ஆகியோரை வரவழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தினார் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ். அதிமுகவினர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு இவ்விவகாரம் பூதாகரமாகியது. உடனடியாக தன்னை தற்காத்து கொள்ள, “அதிகாரிகள் தனக்கு வாழ்த்துச் சொல்ல கட்சி அலுவலகம் வந்திருந்ததாகவும், ஆலோசனை கூட்டத்திற்கு தான் அழைக்கவில்லை” என மழுப்பலாக அறிக்கை விட்டுள்ளார் அன்பில் மகேஷ்.

கலெக்டர், கமிஷனர், கட்சி அலுவலகத்தில் - எல்லை மீறிய தி.மு.க அமைச்சர்..! 

கூட்டத்துக்கு வரவழைத்து விட்டு, இப்பொழுது தனக்கு பிரச்னை என்றதும், அதிகாரிகளை கோர்த்து விடும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் செயலால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்பு கடும் அதிர்ப்தி அடைந்துள்ளது.

https://www.facebook.com/mediyaannews/videos/162961785779418


Share it if you like it