பயங்கரவாத சதி: பி.எஃப்.ஐ. அமைப்பினர் 4 பேர் கைது!

பயங்கரவாத சதி: பி.எஃப்.ஐ. அமைப்பினர் 4 பேர் கைது!

Share it if you like it

பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) நேற்று நடத்திய சோதனையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள், முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தங்களது அமைப்பில் சேர்த்து வருகின்றனர். பின்னர், அவர்களுக்கு ஆயுதங்களை கையாலும் பயிற்சி அளித்து, பயங்கரவாத செயலுக்கு திட்டமிட்டு வருகின்றனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுவதோடு, மதக் கலவரத்தை தூண்டவும் பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர் என்கிற தகவல் என்.ஐ.ஏ. அமைப்பினருக்கு கிடைத்தது. இதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் ஜூலை மாதம் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அமைப்பினர், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அப்துல் காதர், ஷேக் சஹதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் மொபின் ஆகிய 4 பேர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் ஜூலை 6-ம் தேதி தெலங்கானா போலீஸார் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஆகஸ்ட் 26-ம் தேதி விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு, தெலங்கானா, ஆந்திராவில் மேலும் பலரும் இதுபோன்ற சதிச் செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட மாநிலங்களில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது என்.ஐ.ஏ. அமைப்பு. மொத்தம் 24 பேர் அடங்கிய குழுவினர், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். நிஜாமாபாத்தில் 23 இடங்கள், ஹைதராபாத்தில் 4, ஜகிடியலில் 7, நிர்மலில் 2, அடிலாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களில் தலா ஒன்று, ஆந்திர மாநிலம் கர்னூல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் 2 இடங்கள் என மொத்தம் 38 இடங்களில் இந்த சோதனை நடன்தது. இதில், டிஜிட்டல் சாதனங்கள், கத்திகள், ஆவணங்கள் மற்றும் 8.31 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Share it if you like it