அனைத்து சமூகத்தவரையும் ஒன்றிணைக்கும் அங்காளபரமேஸ்வரி

அனைத்து சமூகத்தவரையும் ஒன்றிணைக்கும் அங்காளபரமேஸ்வரி

Share it if you like it

“ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் ” என்ற பாரதியின் பாடலுக்கு இன்னும் உயிர் கொடுப்பவர்கள் இந்து தர்மத்தை சேர்ந்த அதன் வழியில் நடக்கக்கூடிய இந்துக்களே. அப்படிப்பட்ட இந்துக்களிடையே குழப்பத்தை விளைவிக்கக்கூடிய வகையில் இன்றைய அரசியல் கட்சிகள் பல சூழ்ச்சிகளை கையாண்டு வருகிறது. அந்த சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்போம் இந்தப் பதிவின் வாயிலாக. இதற்கு முன் பதிவில் கூறியது போல தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இருக்கக்கூடிய கோயில்களை நாங்கள் இந்த பதிவில் தெரிவிக்கிறோம் என்றோம். ஏற்கனவே பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலை பற்றி பதிவில் தெரிவித்து இருக்கிறோம். இன்று மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி பற்றி தெரிவிக்கிறோம்.

தல வரலாறு:  

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி ஆக வீற்றி இருக்கிறாள் சக்தி ஸ்வரூபிணி. முன்னொரு காலத்தில் நடந்த உண்மை சம்பவம் இது. சிவனைப் போன்று பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. பிரம்மன் கைலாயத்திற்கு வரும்போதும் சக்தியிடம் சிவனைப் போன்று எனக்கும் ஐந்து தலைகள் உள்ளன. படைக்கும் தொழிலை செய்யும் நான் சிறப்புடையவன் என்று அகந்தை யாகவும் கேலியாகவும் பிரம்மன் கூறினார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி சிவனிடம் பிரம்மனின் அகந்தையை அடக்கும் படி கூறினார்.

சிவனும் பிரம்மாவை அழைத்து பேசினார் ஒருகட்டத்தில் சிவனுக்கு கோபம் வர பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எறிந்தார். இதனால் வலி தாங்காத பிரம்மர் கோபமுற்று சிவனுக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபம் என்னவென்றால் கிள்ளிய என் தலை கபாலமாக தங்கள் கையில் இருக்கும். உங்களுக்கு அளிக்கப்படும் உணவுகள் அனைத்தும் அந்த கபாலம் தான் சாப்பிடும். உங்கள் கையை விட்டு கீழே இறங்காது என்றும் பிச்சைக்காரனாய் பூலோகத்தில் பிச்சை எடுப்பார் என்று பிரம்மர் பிரம்மஹத்தி தோஷத்தை சாபமாகக் கொடுத்தார். சரஸ்வதி தன் கணவனின் நிலைக்கு பார்வதி தான் காரணம் என்று பார்வதியை பிச்சைக்காரியாக பூலோகத்தில் கிடைப்பாய் என்று சரஸ்வதி சாபம் கொடுத்தாள்.

இதனால் பூலோகத்தில் சக்தியும் சிவனும் பிச்சைஎடுத்தனர். வேறு வேறு திசையில் பிரிந்து துன்பத்துக்கு உள்ளாயினர். தேவர்களும் முனிவர்களும் பிரம்மனிடம் இதற்கு தீர்வு என்ன என்பதை கேட்டனர். பிரம்மர் இதற்கு தீர்வு பெருமாளிடம் உள்ளது என்றார். தேவர்கள் பெருமாளிடம் சென்றனர் இதற்கு தீர்வு கூறினார் பெருமாள். பிறகு நாரதர் சக்திதேவி இடம் வந்து இந்த தீர்வை கூறினார். இதன் படி நடந்தால் சாபம் விடுபடும் என்றார். சக்தி தேவியும் அவ்வாறு செய்தார். அந்த தீர்வு என்னவென்றால் திருவண்ணாமலையிலுள்ள குளத்தில் சக்தி முழ்கும் போது தன் தோற்றம் மறைந்து வயதான தோற்றம் பெறுவாள்.

பிறகு மேல்மலையனூர் சென்று தவம் செய்தாள் சக்திக்கும் சிவனுக்கும் சாபவிமோசனம் என்று கூறினார நாரதர். பார்வதிதேவியும் அவ்வாறு செய்தார். பிறகு மேல்மலையனூர் சென்று அங்கு உள்ள ஒரு நந்தவனத்தில் தவம் செய்தார். அந்த நந்தவனம் ராஜாவுக்கு சொந்தமானது அந்த நந்தவனத்தை காவல் காக்கும் பொறுப்பு (செம்படவன் என்ற மீனவர்) சமூகத்திற்கு உரியது. அதனால் அங்கு தவம் செய்யக்கூடாது என்று அந்த காவல்காரன் கூறினான். அவனிடம் பணிவாக எனக்கு தவம் செய்ய சிறிது இடம் இருந்தால் போதும் என்று கூறினால் சக்தி. செம்படவன் சம்மதித்து தவம் செய்ய இடம் கொடுத்தான்.

அங்கு சக்தி தேவி தவம் மேற்கொண்டாள். அவரை சுற்றி புற்று ஒன்று வளர்ந்தது. இதனை அறிந்த ராஜா மிகுந்த கோபம் கொண்டு அந்த நந்தவனத்திற்கு வந்து அந்த புற்றை அகற்ற கூறினார். காவலர்கள் இட்த்தனர். செம்படவன் எவ்வளவு தடுத்தும் முயற்சி பயனளிக்கவில்லை. அந்த புற்றைசுற்றி இடித்தவுடன் ராஜாவுக்கு கை கால் செயல் அற்று போய்விட்டது. அப்போதுதான் ராஜா தன் தவறை உணர்ந்து அந்த அம்மையாரிடம் மன்னிப்பு கேட்ட உடனே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.

பிறகு அந்த அம்மையாரை அங்கேயே தவம் செய்ய சொல்லி ராஜா அரண்மனைக்கு சென்றார். பிறகு நாரதர் சிவனிடம் மேல்மலையனூர் செல்லும்படி கூறினார். சிவனும் மேல்மலையனூர் வந்தார் நாரதர் சக்தியிடம் சிவன் சாபம் நீங்க தாங்கள் மூன்று கவளம் சோறு எடுத்துக்கொண்டு மயானத்தில் உள்ள சிவன் கையில் உள்ள கபாலதிர்க்க கொடுக்கவேண்டும்.இரண்டு கவளத்தை கொடுத்தபிறகு மூன்றாவது கவளத்தை கீழே சிதர செய்யுங்கள்.

சிதறிய உணவை சுவைக்க கபாலம் சிவன் கையில் இருந்து இறங்கி கீழே உணவை சாப்பிட வரும் போது தாங்கள் காளி ரூபம் எடுத்து அதனை அழித்து விடுங்கள் என்று கூறினார். சத்தியும் அவ்வாறு செய்து சிவனின் கையில் உள்ள கபாலத்தை அகற்ற செய்தார். பிறகு சிவன் அங்கிருந்து சென்று மகாலக்ஷ்மி அன்னப்பூர்னியாக வந்து சிவனுக்கு அமுது படைத்து அவரை சாபத்தில் இருந்து விடுவிக்க செய்தார்.

மேல்மலையனூரில் அந்த சுடுகாட்டில் சிவன் கையில் உள்ள கபாலத்தை அழிக்க அங்காளபரமேஸ்வரி உருவெடுத்து அங்கு இருக்கும் மக்களுக்கு அருள்பாலிக்கிறாள்.ஆடி அமாவாசை, தை அமாவாசை வெகு சிறப்பாக பூஜை நடக்கும். மாசி அமாவாசை திருவிழாவாக அம்மனுக்கு பூஜை நடக்கும். இந்த அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் ஆக செம்படவன் என்ற மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பாரம்பரியமாக பூஜை செய்கிறார்கள்.

அங்காள பரமேஸ்வரி உலகத்தில் உள்ள துர் சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தியாக உள்ளார். இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில விஷம காரர்கள் இந்த அங்காள பரமேஸ்வரி உக்கிரத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவளின் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அதனை பார்த்து கொண்டிருக்க மாட்டாள் என்பதை இந்த விஷமா காரர்கள் கருத்தில்கொண்டு நல்ல சிந்தனைகளை சிந்திக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறோம்.


Share it if you like it