பராதப் பிரதமர் மோடியின் ஜாதகத்தை ஆய்வு செய்து அதன் ரகசியத்தை பிரபல ஜோதிடர் அனிருத் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
பா.ஜ.க. மூத்த தலைவராக இருப்பவர் மோடி. இவர், ஏழை குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலம் உயர்ந்தவர். ஞானம் தேடி இமயமலை சென்றவரை காலம் அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டது என்பதே நிதர்சனம். அந்த வகையில், தனது கடின உழைப்பின் மூலம் குஜராத் முதல்வர் அதன்பின் பாரதப் பிரதமர் என படிப்படியாக முன்னேறி இன்று உலக தலைவராக மாறி இருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனிடையே, வருகிற 2024 – ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதப் பிரதமர் மோடியை எப்படியாவது? வீழ்த்த வேண்டும் என தேசிய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கங்கணம் கட்டி கொண்டு தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதையே, தி.மு.க, வி.சி.க. மற்றும் சில்லறை கட்சிகள் தமிழகத்தில் செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல ஜோதிடர் அனிருத் மிஸ்ரா மோடியின் ஜாதகத்தை கணித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வருகிற 2024 – ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், மோடியை தோற்கடித்து விடலாம் என அவரது எதிரிகள் பலர் நினைக்கின்றனர். ஆனால், மோடியின் கடைசி மூச்சு உள்ள வரை அவர் ராஜயோகத்துடன் இருப்பார். அவர், விருப்பப்படி தான் பதவி விலகுவார். அவருடைய, ஜாதகத்தை பார்த்த பின்புதான் நான் இதனை கூறுகிறேன். எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் அவரை தோற்கடிக்க முடியாது என தெரிவித்து இருக்கிறார்.
மோடி தாமாக முன்வந்து, தனது பிரதமர் பதவியில் இருந்து விலகும் வரை ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வருகிற 2029 – ஆம் ஆண்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க.வின் கையே ஓங்கி இருக்கும் என மிஸ்ரா கணித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, மோடியை காட்டிலும் யோகி ஆதித்யநாத் அதிரடியான பிரதமராக திகழ்வார் எனவும், 2029 – ஆம் ஆண்டு இந்தியா ஹிந்து நாடு என்று அறிவிக்கப்படும் என அவர் தனது முந்தைய பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் இரண்டாவது முறையாக யோகி அபார வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முன்பே மிக துள்ளியமாக கணித்து இருந்தார். இவரது, கணிப்புகள் 10-க்கு 8 மிக சரியாக இருக்கும் என்பதே இவரது சிறப்பம்சம்.