அண்ணல் அம்பேத்கர் இந்து தர்மத்திலிருந்து வெளியேறவில்லை – அஸ்வத்தாமன் ’மாஸ்’ விளக்கம்!

அண்ணல் அம்பேத்கர் இந்து தர்மத்திலிருந்து வெளியேறவில்லை – அஸ்வத்தாமன் ’மாஸ்’ விளக்கம்!

Share it if you like it

பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளருமான அஸ்வத்தாமன் அண்ணல் அம்பேத்கர் குறித்து பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ப்ளூ கிராஃப்ட் பவுண்டேஷன் என்கிற நிறுவனம் அம்பேத்கரும் மோடியும்: சிந்தினைவாதியும் செயல்வீரரும் என்கிற தலைப்பில் ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டது. அந்தப் புத்தகத்திற்கு, இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், அம்பேத்கருக்கு நிகரானவர் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு உதாரணமாக, பெண்கள் முன்னேற்றம், முத்தலாக் தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் குறிப்பிட்டிருந்தார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் மோடியை எப்படி? அம்பேத்கருடன் ஒப்பிடலாம் என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்து மதத்தை பின்பற்ற கூடியவர். தீவிர இறைபக்தி கொண்டவர். ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிய அம்பேத்காருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசுவது சரியா என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான அஸ்வத்தாமன், பேசு தமிழா பேசு எனும் பிரபல இணையதள ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது, அதில் கலந்து கொண்ட ஒருவர், அண்ணல் அம்பேத்கர் ஹிந்து மதத்தை விட்டு வெளியேறியது பற்றியும், அம்பேத்காருடன் பிரதமரை ஒப்பிட்டது குறித்து கேள்வியினை எழுப்பி இருந்தார்.

இதற்கு, பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் கூறியதாவது; அண்ணல் அம்பேத்கார் புத்த மதத்தை தழுவினார் என்று கூறினால் அது சரி. அண்ணல் அம்பேத்கார் இந்து தர்மத்திலிருந்து வெளியேறினார் என்று நீங்கள் கூறினால் அண்ணல் அம்பேகாரை நீங்கள் படிக்கவில்லை என்று அர்த்தம். அண்ணல் அம்பேத்காரை உங்களுக்கு புரியவில்லை என்று அர்த்தம். ஏன்? என்றால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் புத்த சமயத்தையும், ஜைன சமயத்தையும் சேர்த்து தான் அண்ணல் அம்பேத்கார் ஹிந்து மதம் என்று பயன்படுத்துகிறார்.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படுகிற தர்மமும், புத்த சமயம் போதிக்கிற தர்மமும் ஒன்று தான் என அண்ணல் அம்பேத்கார் தரவுகள் அடிப்படையில் சொல்லியிருக்கிறார். அப்போ, புத்த சமயத்தை அண்ணல் தழுவினார் என்பதே உண்மையான வாதமே தவிர. ஹிந்து தர்மத்திலிருந்து வெளியேறினார் என்று சொல்வது அண்ணல் அம்பேத்காரை புரிந்து கொள்ளாதவர்களின் பேச்சு என்று குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it