காது கேட்கும் கருவி குறித்து அவதூறு பரப்பிய தி.மு.க. ஐடி விங் மற்றும் ஜூனியர் விகடனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரப்பு தக்க பதிலடியை கொடுத்துள்ளது.
கோவை தெற்கு மாவட்டம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98 -வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்களை அண்ணாமலை வழங்கினார்.
இதையடுத்து, அண்ணாமலை பேசும் போது, காது கேட்கும் கருவியின் உண்மை தொகையை குறிப்பிட்டு பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, கழக கண்மணிகள் மற்றும் அதன் அடிவருடி ஊடகங்கள் பா.ஜ.க. தலைவர் சொல்வது பொய். அமேசானில், அதன் உண்மையான மதிப்பு வெறும் ரூ.345 என்று கூறினர். இதையடுத்து, சில்லறை போராளிகள், சீப்பு நெறியாளர்கள் போன்றவர்கள் பா.ஜ.க. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வந்தனர்.
இந்நிலையில், காது கேட்கும் கருவியின் பில்லை அண்ணாமலை தரப்பு மக்கள் மன்றத்தில் தற்போது சமர்ப்பித்துள்ளது. ஆதாரம் இதோ,