எம்.பி. பதவியிலிருந்து திருமாவை தூக்குவேன்: உச்ச நீதிமன்ற வக்கீல் ஆவேசம்!

எம்.பி. பதவியிலிருந்து திருமாவை தூக்குவேன்: உச்ச நீதிமன்ற வக்கீல் ஆவேசம்!

Share it if you like it

ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை எம்.பி. பதவியிலிருந்து தூக்குவேன் என்று ஆவேசமாகக் கூறியிருக்கும் டெல்லி உச்ச நீதிமன்ற வக்கீல் ராமசாமி, திருமாவளவன் மீது சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருக்கும் திருமாவளவன், சனாதன எதிர்ப்பு என்கிற பெயரில் ஹிந்துக்களையும், ஹிந்து மதத்தையும், ஹிந்து கோயில்களையும், ஹிந்துக் கடவுள்களையும், ஹிந்து அமைப்புகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார். இவரது பேச்சுக்கள் ஹிந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, திருமாவளவன் தொலைக்காட்சி பேட்டிகளின்போது, தான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகவும், இஸ்லாம் மதத்துக்கு மாறி விட்டதாகவும், பௌத்த மதத்தை தழுவி விட்டதாகவும் நிலையற்று உளறிக் கொட்டி வருகிறார். இதனால், அவர் எந்த மதத்தைத் தழுவி இருக்கிறார் என்பதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மாற்ற மதத்தை தழுவிய திருமாவளவனுக்கு ஹிந்து மதத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சூழலில், ஹிந்து மதத்தையும், ஹிந்துக் கடவுள்களையும் தொடர்ந்து இழிவுபடுத்துவதோடு, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளையும் பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து பேசிவரும் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து தமிழக டி.ஜி.பி. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி காலை மதுரை சைபர் க்ரைம் அலுவலகத்தில் வழக்கறிஞர் ராமசாமி ஆஜரானார். பின்னர், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, திருமாவளவன் ஹிந்து மதத்தை இழிவாகப் பேசியது, ஹிந்து அமைப்புகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்துப் பேசியது தொடர்பான ஆதாரங்களை வக்கீல் ராமசாமி சமர்பித்தார்.

விசாரணை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, “திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்து, 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவேன். திருமாவளவனை எம்.பி. பதவியிலிருந்து தூக்காமல் விடமாட்டேன்” என்று ஆவேசமாகக் கூறினார். இதன் பிறகு, ராமசாமி வீடு திரும்பினர். அப்போது, வக்கீல் ராமசாமி சென்ற காரை, சிலர் வழிமறித்து காரின் மீது முட்டைகளை வீசியதோடு, கார் கண்ணாடிகளை கட்டையால் அடித்து உடைத்தும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதுகுறித்தும் வக்கீல் ராமசாமி சாலைகிராமம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக, அடையாளம் தெரியாத 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it