முதல்வருக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

முதல்வருக்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

Share it if you like it

விழுப்புரத்தில் நிகழ்ந்த படுகொலையை குடும்ப சண்டை என்று கூறிய முதல்வருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை வெகுவிரைவில் பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், இந்த மக்கள் விரும்பும் ஆட்சியாக இல்லை. அதற்கு மாறாக கொலை, கொள்ளை, திருட்டு, என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், விழுப்புரத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ;

விழுப்புரத்தில் தமிழக முதல்வர் படம் பொறித்த பனியன் அணிந்த தி.மு.க. ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் இப்ராஹிம் ராஜா என்ற சகோதரரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

ஆனால், சட்டசபையில் குடும்பச் சண்டை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர். குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது.

ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து தி.மு.க.வினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் தி.மு.க. கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க தமிழக பா.ஜ.க. சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it