மூன்று மாநில முதல்வர்களின் பெயர்கள் வரும் முன்பே… அண்ணாமலையின் பெயரை வெளியிட்ட பா.ஜ.க.!

மூன்று மாநில முதல்வர்களின் பெயர்கள் வரும் முன்பே… அண்ணாமலையின் பெயரை வெளியிட்ட பா.ஜ.க.!

Share it if you like it

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்று மாநில முதல்வர்களின் பெயர்கள் வெளிவரும் முன்பே அண்ணாமலையின் பெயரை பா.ஜ.க. மேலிடம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலை பா.ஜ.க. மேலிடம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, மூத்த தலைவரும் ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரின் பெயர்களை அறிவிக்கும் முன்பே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம் பெற்றது. இதுதான், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it