நான் ஒரு சாதாரண தொண்டன்; என் உயிரை கொடுத்தாவது இந்த கட்சியை வளர்ப்பது என் முதல் கடமை – மாஸ் பேட்டி!

நான் ஒரு சாதாரண தொண்டன்; என் உயிரை கொடுத்தாவது இந்த கட்சியை வளர்ப்பது என் முதல் கடமை – மாஸ் பேட்டி!

Share it if you like it

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க கணிசமான இடங்களில் வெற்றி தனது இருப்பை மக்களிடம் பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்தும் தனது பணி குறித்தும் சிறப்பான பேட்டியை அளித்துள்ளார் இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் தனித்து களம் கண்டது அக்கட்சி. தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் பல்வேறு மாவட்டங்களில் கணிசமான இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து பத்திரிக்கைகள், ஊடகங்கள் வாயிலாக வரும் செய்திகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அந்த வகையில், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் அளித்த பேட்டியில் சிலவற்றை இங்கே வழங்கியுள்ளோம்.

முன்னாள் மாநில தலைவர்கள், இந்தக் கமலாலயத்தில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் எல்லோருடைய உழைப்பும் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம். என் உயிரை கொடுத்தாவது இந்த கட்சியை வளர்க்க வேண்டும் என்பதே என் முதல் கடமை.

நிருபர்: “ஒருவர் (டாக்டர் தமிழிசை) கவர்னர் ஆகிவிட்டார். ஒருவர் (டாக்டர் முருகன்) மத்திய அமைச்சர் ஆகிவிட்டார். அடுத்து உங்களுக்கு எதுவும் பதவி….?”

பதில்: “நான் ஒரு தொண்டன். ஊரில் என்னுடைய ஆடையும் மாட்டையும் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கவலை எல்லா அங்கே தான் இருக்கிறது. கவர்னர் ஆஃபீஸ்லயோ மினிஸ்டர் ஆஃபீஸ்லயோ உட்காரத் தெரியாது. என்னை எப்போது இந்த (மாநில தலைவர்) பொறுப்பிலிருந்து வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, மறுபடியும் போய் விவசாயம் செய்வதை தான் பாக்கியமாக கருதுகிறேன்..

என் பணியை முடித்ததும் கட்சி என்னை, ‘தம்பி கிளம்பு. உன் வேலையை முடித்து விட்டாய். இனி நீ தொண்டனாய் இரு. உங்க ஊர் பூத் தலைவனாக இரு. தொட்டம்பட்டியில் போய் விவசாயம் பார்’ என்று எப்போது என் தேசிய தலைவர் சொல்கிறாரோ, அடுத்த செகண்ட் பஸ்ஸை பிடித்து கிளம்பிவிடுவேன். நான் கட்சி தலைவராக இருக்கும் வரை எனது உயிரை கொடுத்தாவது இந்த கட்சியை வளர்க்க பாடுபடுவேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it