உக்ரைனில் இருந்து மத்திய அரசால் மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேரில் சென்று வரவேற்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் போர் மிக உக்கிரமாக நடைபெற்று வருகிறது. அப்பாவி மக்களின் உயிர் குறித்து கவலைக் கொள்ளாமல் இருநாடுகளும் பிடிவாதமாக சண்டையிட்டு வருகின்றன. வல்லரசு நாடுகள் முதல் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்தும் போர் நின்றதாக தெரியவில்லை. இதன் காரணமாக, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அரும்பாடுபட்டு வருகிறது. மேலும், நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக களத்திற்கே அனுப்பியுள்ளது. அதன் பயனாக பலர் நாடு திரும்பும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்கு கிடைக்கும் நற்பெயரை, தனது ஆட்சிக்கு கிடைத்த சாதனையாக மாற்ற, தி.மு.க அரசு பெரும் முயற்சி செய்து வருகிறது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக, சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று, உக்ரைனில் இருந்து திரும்பி வரும் தமிழக மாணவர்களை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவேற்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.