லாவண்யா தற்கொலையை தொடர்ந்து; மாணவி சுகன்யா வழக்கை தூசி தட்டிய பா.ஜ.க தலைவர்..!

லாவண்யா தற்கொலையை தொடர்ந்து; மாணவி சுகன்யா வழக்கை தூசி தட்டிய பா.ஜ.க தலைவர்..!

Share it if you like it

அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு, நீதி கிடைக்க வேண்டி நாடு முழுவதும் போராட்டம் நடைப்பெற்று வரும் சூழலில். சேலம் மாவட்டதை சேர்ந்த மாணவி சுகன்யா-விற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்த, இவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற பள்ளி ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மாணவி லாவண்யா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோரை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் ஆசை வார்த்தைகளை கூறி தங்களது விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மாணவியின் பெற்றோர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கோவம் அடைந்த ஆசிரியர்கள், பொங்கல் விடுமுறைக்கு கூட மாணவியை வீட்டிற்கு அனுப்பாமல், விடுதியின் அறைகளை சுத்தம் செய்ய வைத்தல், பாத்திரம் கழுவ வைத்தல், என்று பலவகையிலும் லாவண்யாவிற்கு டார்ச்சர் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க. ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் வரும் நிலையில். சேலம் மாவட்டதை சேர்ந்த மாணவி சுகன்யா என்பவருக்கு 2006- ஆண்டு கிறிஸ்தவ மிஷ’நரி’ பள்ளியில் ஏற்பட்ட துயர சம்பவம் குறித்த காணொளி ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it