5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்கள்: அண்ணாமலை அதிரடி!

5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்கள்: அண்ணாமலை அதிரடி!

Share it if you like it

ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட பார்வையாளர்களை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ராமநாதபுர மாவட்டத்தின் மாவட்ட பார்வையாளராக கே.முரளீதரன், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பார்வையாளராக எம்.ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பார்வையாளராக கே.வெங்கடேசன், சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளராக ஆர்.ஏ.வரதராஜன் மற்றும் தருமபுரி மாவட்ட பார்வையாளராக கே.முனிராஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.


Share it if you like it