ஆடியோ விவகாரம்: தி.மு.க.விற்கு  அண்ணாமலை குழு ஷாக்!

ஆடியோ விவகாரம்: தி.மு.க.விற்கு அண்ணாமலை குழு ஷாக்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கு இணங்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இன்று சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், அண்மையில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதாவது, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் கடந்த ஒரு வருடத்தில் ரூ.30,000 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருப்பதாக பேசியிருக்கிறார். இந்த, ஆடியோ தான் தமிழகம் முழுவதும் தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் அந்த குரல் என்னுடையது அல்ல என விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, 3 நாட்கள் கழித்து அமைச்சர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உத்தரவினை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இன்று சந்திக்கின்றனர். அந்த வகையில், அமைச்சரின் ஆடியோ குறித்து முழுமையான விசராணையை மேற்கொள்ள வேண்டும் என அவரிடம் வலியுறுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


Share it if you like it