தி.மு.க.வின் அட்டாக் லேயர்கள்: ஒவ்வொன்றாக உரிக்கும் அண்ணாமலை… சொல்லி அடிக்கும் கில்லி!

தி.மு.க.வின் அட்டாக் லேயர்கள்: ஒவ்வொன்றாக உரிக்கும் அண்ணாமலை… சொல்லி அடிக்கும் கில்லி!

Share it if you like it

தி.மு.க. என்றால் இதுதான் என வெங்காயத்தோடு ஒப்பிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அன்றே மிக துல்லியமாக கணித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளர் சுப்பு எழுதிய திராவிட மாயா என்னும் ஆங்கில புத்தகம் சென்னை மைலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் பிரபாகரன், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, வின் டிவி அதிபர் தேவநாதன் யாதவ் மற்றும் பா.ஜ.க முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசும் போது இவ்வாறு கூறினார் :

தி.மு.க.வை வீழ்த்துவது மிக எளிது. அது சக்கரவியூகம் போல வெளியே ஒரு மீடியா மற்றும் ஆங்கில புலமை கொண்ட ஒரு வெளிப்புற லேயர். அதை நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து உள்ளே சென்றால் அங்கு அட்டாக் லேயர் இருக்கும். இவர்களிடம் நாம் அறிவார்ந்து ஏதாவது பேசினால் கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள். நம்மை வசைப்பாடி அடக்கப் பார்ப்பார்கள்.

இந்த அட்டாக் லேயரை மீண்டும் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து சென்றால் அங்கு குறுநில மன்னர்கள் லேயர் இருக்கும். இவர்களை முதல் இரண்டு லேயர்களும் எப்போதும் பாதுகாத்து கொண்டு இருக்கும். இவர்கள் வசம் பல ஏரியாக்கள் தலைமுறை தலைமுறையாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். இவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சுயமாக செய்யும் ஆற்றல் இருக்காது.

ஒரு விமானம் பிடித்து தில்லிக்கு தனியாக சென்று வர கூட இயலாதவர்கள். இந்த லேயரையும் நாம் அதே பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் கொண்டு சென்றால், உள்ளே குடும்ப லேயர் இருக்கும். இந்த குடும்ப லேயரிடம் தான் அனைத்து ஆளுமையும் இருக்கும். அதையும் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தால், உள்ளே கோபாலபுரம் லேயர் இருக்கும். முதல் நான்கு லேயர்களையும் உரித்து போட்டு விட்டால், இந்த கோபாலபுரம் லேயரை எளிதில் வீழ்த்தி விடலாம். வெங்காயத்தில் உள்ளே எதுவுமே இல்லை என்பது போல் இந்த கோபாலபுர லேயரில் எந்த சரக்கும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில், படியளக்கும் தி.மு.க.வை காக்கும் பொருட்டு சைதை சாதிக், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மற்றும் குடியாத்தம் குமரன் போன்ற அட்டாக் லேயர்கள் அண்ணாமலை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இந்த லேயர்களை தான் அண்ணாமலை தற்போது உரித்திருக்கிறார். அன்றே மிக துல்லியமாக தி.மு.க.வின் தரத்தை கணித்திருக்கிறார். அண்ணாத்துரை வளர்த்த கட்சியை அண்ணாமலை வீழ்த்துவார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it