உ.பி. சட்டமன்ற தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத், தூய்மைப்பணியாளர் ஒருவருக்கு சீட் வழங்கி, அவரை வெற்றியும் பெற வைத்திருப்பதுதான் உண்மையான சமூகநீதி என்று தி.மு.க. அரசுக்கு பாடம் நடத்தி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதோடு, முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறை கைப்பற்றி வரலாறு படைத்தார். தவிர, உ.பி.யோடு சேர்த்து நடந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆகவே, இத்தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை, தேர்தல் என்றாலே பணம்தான் பிரதானம். குறிப்பாக, இந்த விஷயத்தில் தி.மு.க. படு ஸ்டிரிக்ட். அதாவது, தேர்தலில் சீட் வேண்டுமென்றால் கட்சிக்கும் கப்பம் கட்ட வேண்டும், வாக்காளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும், தேர்தல் செலவையும் கவனிக்க வேண்டும். அந்த வகையில், பார்த்தால் கோடீஸ்வரர்கள் மட்டுமே தி.மு.க. தரப்பில் போட்டியிட முடியும். அதேபோல, கட்சியில் நிர்வாகிகளாக இருப்பவர்களுக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்படும். அதேசமயம், பா.ஜ.க.வை பொறுத்தவரை கட்சியில் நிர்வாகியாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. பணம் இருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. மக்கள் செல்வாக்கே முக்கியம்.
அதன்படிதான், உ.பி. சட்டமன்றத் தேர்தலில் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆகவே, இதுதான் உண்மையான சமூகநீதி. இதை செயலில் காட்டக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. தி.மு.க. போன்று உதட்டளவில் பேசும் கட்சி அல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அரசை கடுமையாக சாடி இருக்கிறார்.