இனி அடிக்கடி மின்வெட்டு ஏற்படலாம் எனவே, தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில், ஜெனரேட்டர் வாங்கி வையுங்கள் என்று, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க ஆளும் கட்சியாக மாறிய பின்பு, தொடர்ந்த ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஸ்டாலின் அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் எடுத்து கூறவேண்டிய பொறுப்பு அ.தி.மு.க.விற்கு உண்டு. மேலும், இபிஎஸ் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே நாளுக்கு நாள் பனிப்போர் தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக, சிறந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க.வால், செயல்பட முடியாமல் இன்று வரை திணறி வருகிறது, என்பதே நிதர்சனமான உண்மை. அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லாததே, இதற்கு காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
அந்த வகையில், அ.தி.மு.க செய்ய வேண்டியதை தற்பொழுது, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ஆளும் கட்சியின் தில்லு, முல்லுகளையும் அவர்கள் செய்யும் தவறுகளையும், தொடர்ந்து மக்களுக்கு சுட்டிக்காட்டி வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிக்கையான தினமலர் பா.ஜ.க தலைவர் தெரிவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை செய்தியாக வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பி.ஜி.ஆர் எனர்ஜி என்ற பெயரில் பேப்பரிலேயே இயங்கக்கூடிய நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் செய்துள்ளது. தகுதியே இல்லாத இந்த நிறுவனத்திற்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின்வாரியம் கொடுத்திருக்கிறது. கோபாலபுரத்தில் தொடர்பு இருப்பதாலேயே பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி அடிக்கடி தமிழகத்தில் மின்வெட்டு வரலாம். மக்கள் தங்கள் வீடுகளில் யுபிஎஸ், ஜெனரேட்டர்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.