தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இருவரும் சமூக வலைத்தளத்தில் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், பா.ஜ.க., மத்திய அரசு மற்றும் பாரதப் பிரதமர் மோடியை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வதிலேயே தனது முழு கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சீண்டும் விதமாக நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
ஆட்டின் (சிம்பிள்) இந்த பெயரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. ராணுவ வீரரின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அபாண்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு. அந்த சாபம் பா.ஜ.க மீது தான் விழும் என தெரிவித்து இருந்தார்.
நிதியமைச்சருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, பணக்காரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர இந்த வாழ்க்கையில் பயனுள்ள எதையாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழுபவர்களுக்கு, ஒரு விவசாயியின் மகன் வளர்வதை ஏற்று கொள்ள முடியாது தான். அரசியலுக்கும், மாநிலத்திற்கும் நீங்கள் ஒரு சாபக்கேடானவர். பெரிய விமானங்களில் பயணம் செய்யாதவர்கள் நாங்கள்; வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியதில்லை. முக்கியமாக, நிலையான சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறுதியாக, என் காலனிக்கு இருக்கும் தகுதி கூட உங்களுக்கு இல்லை என அண்ணாமலை பதிலடி கொடுத்து இருக்கிறார்.